கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. அதனால் வீட்டில் இதனை வளர்க்கும்போது விஷக்கிருமிகள் அண்டுவது இல்லை. குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகுவதால் மூச்சுவிட சிரமப்படுவார்கள். கற்பூரவள்ளி இலையை வதக்கி சாறு எடுத்து ஐந்து மில்லி கிராம் காலையும் மாலையும் கொடுத்துவந்தால் மார்பு சளி நீங்கும்.
கற்பூரவள்ளி சாறுடன் தேன் கலந்து காலையில் அருந்திவந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைக் கமறல் போன்றவை நீங்கும். கற்பூரவள்ளி இலை சாறுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
உடலில் சூடு காரணமாக ஏற்படும் கட்டிகளின் மீது இலையை அரைத்துப் போட்டால் விரைவில் பட்டுப்போகும். நரம்புகளுக்கு சத்து கொடுக்கவும் மனக் கோளாறுகளைத் தடுக்கவும் பல மருந்துகள் இந்த கற்பூரவள்ளி செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் வீட்டில் கற்பூரவள்ளி வளர்த்து பயன்படுத்தினால் ஆரோக்கியம் பெருகும்.