டி.வி.யில் அதிக சத்தம் வைத்துப் பார்ப்பதாக யாராவது புகார் செய்கிறார்களா? லிபோன் அல்லது காலிங்பெல் அடிப்பது சரிவர கேட்பது இல்லையா? பிறருடன் உரையாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள சிரமப்படுவதுடன், திரும்பச் சொல்லும்படி கேட்கிறீர்களா?
சத்தம் எங்கே இருந்து வருகிறது என்பதில் குழப்பம் நிகழ்கிறதா? தொலைபேசியில் எதிர்முனையில் பேசுவதை புரிந்துகொள்ள சிரமம் இருக்கிறதா அல்லது எதிர்முனையில் பேசுபவர்கள் முணுமுணுப்பதாக நினைக்கிறீர்களா?
நன்றாக காது கேட்கிறதா என்று யாராவது சந்தேகம் கேட்டுள்ளார்களா..? இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கு மேல்பட்டவை இருந்தாலே காதுக்கு பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் காதை சுத்தப்படுத்துகிறேன் என்று கண்டதையும் போட்டு குடையவே கூடாது. ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகும்போது விரைவில் நல்ல தீர்வு கிடைக்கிறது.