ஜப்பானை சேர்ந்த இவாமோட்டோ ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவருக்கு சிறு வயது முதலே ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை.
படகோட்டுவதில் வல்லவரான இவாமோட்டோ, அதிலேயே சாதனை படைக்க முடிவு செய்தார். அதன் படி ஜப்பான் – அமெரிக்கா இடையிலான பசிபிக் கடலை சிறிய படகில் கடக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
இதற்காக அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார் இவாமோட்டோ. இந்த நிலையில் மூன்று மாதங்கள் படகில் பயணித்து அவர் வெற்றிகரமாக ஜப்பானை வந்தடைந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த திசைகாட்டுநர் ஒருவரை மட்டுமே அருகில் வைத்துக்கொண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். வெறும் 12 மீட்டர் நீள படகில் சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் கடலை கடந்து சாகசம் படைத்துள்ளார் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.