• குழந்தை முழுக்க முழுக்க உணவுக்கு தாயை மட்டுமே நம்பியிருப்பதால், போதுமான சரிவிகித சத்துள்ள உணவுகளை தாய் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
• இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகள், உடல் எடையை குறைக்கும்படி இருக்கவேண்டுமே தவிர, உடல் எடையை கூட்டும் அளவுக்கு அமையக்கூடாது.
• உடல் எடையை குறைக்கவேண்டும் என்று போதுமான உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், பெண்ணின் எலும்புகளின் வலிமை குறைந்துவிடும்.
• அதனால் புரோட்டீன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தையாமின், வைட்டமின்கள் போன்ற அத்தனை சத்துக்களும் நிரம்பிய சரிவிகித உண்வு இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு எத்தனை கலோரி தேவை என்று அளவிட்டு, அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது மிகுந்த பயனளிக்கும். மூன்று நேரத்திற்கு பதில் ஐந்து அல்லது ஆறு நேரமாக கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொள்ளலாம். சரியான உடற்பயிற்சியும் போதிய சரிவிகித உணவும் எடுத்துக்கொண்டால் உடல் எடை சீராக குறையத் தொடங்கும்.