சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை என்று சொல்லப்படும் வெங்காயத்தில் நிறைய நிறைய மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் இரண்டுமே ஒரே மருத்துவத் தன்மை கொண்டவை.

• ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு என்பதால் இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.

• நீர்க்கடுப்பு, சிறுநீர்த் தொற்று காரணமாக அவஸ்தைப்படுபவர்கள் வெங்காய சாறு குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

• மூளைக்கும் நரம்புக்கும் சுறுசுறுப்பு தரும் மூலக்கூறுகள் வெங்காயத்தில் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

• கண்ணீர் சுரப்பியை சுத்திகரிக்கும் தன்மை வெங்காயத்துக்கு உள்ளது. அத்துடன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வாயில் வெங்காயத்தை பச்சையாக போட்டு மெல்லுவதால் வாயில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற முடியும். அதேபோல் தொண்டைப்புண், இருமலுக்கும் நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்