துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே துளசியில் மருத்துவத் தன்மைகளும் நிரம்பியுள்ளன.
• தினம் சில துளசி இலைகளை வெறும் வயிற்றில் தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான தொந்தரவுகளைத் தடுக்கும்.
• துளசி சாறு கிருமிநாசினியாக செயல்பட்டு உடலுக்குத் தெம்பும் புத்துணர்ச்சியும் தரக்கூடியது.
• குளிக்கும் நீரில் துளசி இலைகளை ஒருநாள் முன்னரே ஊறவைத்து குளித்தால், வியர்வை நாற்றம் அகன்றுவிடும்.
• துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு அரைத்து தோலில் தடவினால் படை, சொறி போன்ற தோல் நோய்கள் நீங்கும்.
உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றக்கூடிய குணமும், தொண்டைப்புண், வாய்ப்புண் போன்றவற்றை அகற்றக்கூடிய ஆற்றலும் துளசிக்கு உண்டு.