இதனையடுத்து தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த மாடலாக ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (Huawei Smart P Plus) என்ற புதிய வகை ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
விரைவில் இந்த புதிய ரக ஸ்மார்ட் போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2.2 GHz வேகம் மற்றும் 4GB ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் ஹவாய் HiSilicon KIRIN 710 ப்ரோசெசர் கொண்டது. 64GB இன் உள் சேமிப்பு திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பய்(9.0) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
கேமராவை பொறுத்தவரையில் 8 மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புறத்தில் 24 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பிரகாசமான மற்றும் குறைந்த ஒளி நிலைகளில் அற்புதமான படங்களை கைப்பற்ற பயன்படுத்தக்கூடிய எல்.ஈ.டி ப்ளாஷ் உடன் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு வசதியும் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் 3,400 எம்.ஏ.ச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ஸ்மார்ட் போன்கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது