வலி, வேதனை போன்ற அசெளகரியங்கள் எதுவும் இல்லையென்றாலும் எழுந்து உட்கார்ந்தல், நடத்தல் போன்றவற்றை மட்டுமே செய்யவேண்டும். வீட்டு வேலைகளை செய்தல், குனிந்து வளைந்து வீடு பெருக்குதல் போன்ற எந்தப் பணியையும் ஒரு வார காலம் செய்யாமல் இருப்பது நல்லது.
குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் இந்த ஒரு வார காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.
ஒருசில நாட்கள் ஓய்வு எடுப்பதற்கு சங்கடப்பட்டு உடலை வருத்திக்கொள்வது, சில நேரங்களில் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். அதனால் குழந்தையை கவனிப்பதுதான் முதல் பணி என்று ஒரு வார காலம் கட்டாய ஓய்வு இருப்பது நல்லது.