·
கை, கால், கழுத்து, தோள் போன்ற உடல்
பகுதிகள் வலிமை அடைவதற்கும் குப்புறப்படுத்தல் பயன்படுகிறது.
·
குழந்தை குப்புறப்படுத்து, தலையை
உயர்த்தி, ஆட்டுவதால் தலை சரியான வடிவத்திற்கு வந்தடைகிறது. மேலும் தலையை கட்டுப்படுத்தும்
திறனும் குழந்தைக்கு விரைவில் உண்டாகும்.
·
குப்புறப்படுக்கும் குழந்தைகள் விரைவில்,
விளையாடும் ஆற்றலை வளர்த்துக்கொள்கின்றன.
·
தாய் அல்லது தந்தை நிமிர்ந்து படுத்திருக்கும்போது,
குழந்தையை தங்கள் நெஞ்சில் குப்புறப் படுக்கவைத்து பழக்குவதும் நல்லது.
குழந்தைக்கு குப்புறப்படுப்பதில் விருப்பம் இல்லையென்றால்,
கண்ணாடி, பொம்மை போன்றவற்றை எதிரில் போட்டு தலையை உயர்த்திப் பார்க்கவும், தலையை ஆட்டுவதற்கும்
பெற்றோர் உதவிசெய்ய வேண்டும்.