தினமும் வெறும் வயிற்றில் கருஞ் சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்துவந்தால் நீரிழிவு கட்டுப்படும். அது அட்டுமல்லாமல் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயால் உடலில் உண்டாகும் இன்ன பிற குறைப்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க செய்கிறது. ஆனால் கட்டுப்படுத்தப் படாத நீரிழிவு இருக்கும் போது கருஞ்சீரகத்தால் மட்டுமே குறைக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனை யோடு மாத்திரைகளும் எடுத்துகொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்தின் பங்கு அளப்பரியது. வளரும் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு உணவு வழியாக இதைக் கொடுத்துவந்தால் அவர்கள் நீரிழிவு நோயை எதிர் கொள்ள மாட்டார்கள். நீரிழிவு வந்தவர்கள் அவ்வபோது கருஞ்சீரக நீரை எடுத்துவந்தால் இரத்தத் தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தடுக்கும்.
பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு கொடுக்கும் பிரசவ லேகியத்தில் கருஞ்சீரகமும் சேர்த்து கொடுப்பது வழக்கம். இது கருப்பையில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவும்.