சைனஸ் பிரச்சனையால் பெரும் அவதிப்படுவோர்க்கு சில சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

சைனஸ் பிரச்சனையால் பெரும் அவதிப்படுவோர்க்கு சில சிறந்த வீட்டு வைத்தியங்கள்!

மிளகை முதலில் நன்றாக அரைத்து பொடி போல் ஆக்கிக்கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் மிளகு எடுத்து ஒரு கப் கொதிக்கும் நீரில் கலந்து விட்டு, தினமும் மூன்று முறை குடித்து வந்தால் சைனஸ் பிரச்சனைகள் நாளடைவில் மறைந்துவிடும் என்று கூறுகின்றனர். உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெயை சூடு நீரில் ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். யூகலிப்டஸ் நறுமணம் நம் மூக்கு வழியாக உள்ளே செல்லும் பொழுது கிருமிகள் அழிந்துவிடும். விரைவில் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

யூக்கலிப்டஸ் எண்ணெய் என்பது சைனஸ் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தர வல்லது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி உள்ளது. இது ஒரு இயற்கையான டானிக். சைனஸ் மட்டுமல்லாமல் தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் யூக்கலிப்டஸ் எண்ணெய் பெரிதளவில் உபயோகம் ஆகிறது. உலகம் முழுவதும் யூகலிப்டஸ் எண்ணெய் மருத்துவ முறையானது மிகவும் பாதுகாப்பான மருத்துவ முறையாக கண்டறியப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் நல்ல முறையில் பலன் கிடைக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்