நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும் | Home Remedies to Remove Stretch Marks in Tamil

நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட 3 மாதத்துக்குள் நீங்கும்…

பிரசவம் வரை வயிற்றில் உள்ள குழந்தைக்காக பல்வேறு உணவுகளைச் சாப்பிட்டு, பல கட்டுப்பாடுகளை ஏற்று அதைப் பின்பற்றி இப்போது தாயாகிவிட்டார்கள். உங்கள் வயிற்றில் வரி வரியான கோடுகள், தழும்புகள் (Stretch Marks) ஏற்பட்டிருக்கும். அதை மறைக்க நீங்கள் பாடுபடுவது புரிகிறது. உங்களுக்காகவே இந்தப் பதிவு.

யாருக்கெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரலாம்?

  • கர்ப்பிணிகள்
  • இளம் வயதிலே கர்ப்பிணியான பெண்கள்
  • உடல் எடையை திடீரென்று குறைத்தவர்கள்
  • கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள், உடல் எடையைக் குறைத்த போது ஏற்படலாம்
  • சீரற்ற ஹார்மோன் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள்
  • மரபியல் காரணங்கள்

ஏன் ஸ்ட்ரெச் மார்க் வருகிறது? 

  • வயிற்றில் குழந்தை உருவானதும் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைகிறது.
  • பொதுவாக நம் சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் எனும் புரதங்கள் உள்ளன. இவை வளைவுத்தன்மைக்கு உதவுபவை.
  • மேலும், இவை நம் சருமத்தைப் பாதுகாக்கும் வேலையை செய்கின்றன.
  • வயிறு விரிவடைந்து கொண்டே வந்து, பிரசவத்திற்கு பின்பு மீண்டும் சுருங்குவதால் டெர்மிஸ் (Dermis) எனும் லேயர் உடைக்கப்படுகிறது. அப்போது ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.
  • அதுபோல கர்ப்பிணிகள் தவிர யாருக்கெல்லாம் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும் என மேற்சொன்னது போல சில காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் (தழும்புகள்) உருவாகின்றன.

கிரீம்கள் செய்யும் மாயாஜாலம்

Image Source : Credit inhabitat.com

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

  • கர்ப்பக்காலத்தில் 8, 9 மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. இவர்கள் கருவுற்ற பிறகு 4 மாதங்களுக்கு பிறகிலிருந்தே சரும மருத்துவரிடம் சென்று, தரமான மாய்ஸ்சரைசரைப் பரிந்துரைக்க சொல்லி பூசி வரலாம்.
  • ஸ்ட்ரெச் மார்க் நீங்க, 4-வது மாதத்திலிருந்தே சரும மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கொகோ பட்டர் கலந்து மாய்ஸ்சரைசரைப் பூசி வந்தால் தழும்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
  • சருமத்துக்கான ஈரப்பதம் சரியான அளவில் இருந்து வந்தால் தழும்பாக மாறும் வாய்ப்பு பெருமளவு குறைக்கப்படும். 50% அளவுகூட குறைக்கப்படும்.
  • இன்னும் சிலருக்கு சருமத்தில் தழும்புகள் இல்லாமலே, வராமலே தடுக்க முடியும்.
  • தொடர்ந்து நல்ல தரமான, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட கிரீம்கள், மாஸ்சரைசர் பயன்படுத்துபவர்களுக்கு பிரசவத்துக்கு பிறகு 10% ஸ்ட்ரெச் மார்க் மட்டுமே இருக்க கூடும். அதையும் போக்க வழிகள் உள்ளன.
  • ஆம், காலப்போக்கில் கிரீம்களைப் பயன்படுத்தி வரத் தழும்புகள் மறைந்துவிடும்.
  • நீங்களாக மருந்து கடைக்கோ அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கோ சென்று சுயமாக வாங்கி பயன்படுத்த கூடாது.
  • ஏனெனில் பல கிரீம்களில் பக்கவிளைவுகள் வரக்கூடிய கெமிக்கல்கள் கலந்திருக்கும்.
  • மேலும் சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருக்கும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளன.
  • பால் கொடுக்கும் தாய்மார்கள், சில கிரீம்களைப் பயன்படுத்த கூடாது எனச் சொல்வார்கள். ஆதலால் மருத்துவர் பரிந்துரைக்காமல், நீங்கள் எந்த கிரீமையும் பயன்படுத்த வேண்டாம்.

இயற்கையான முறையில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் நீங்கும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம். 

பிரசவத்துக்குப் பின் செய்யவேண்டியவை

#1. ஆலிவ் எண்ணெய்

Image Source : Credit StyleCraze.com

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

தரமான, ஆர்கானிக் ஆலிவ் எண்ணெயை வாங்கி பூசலாம். ஆவில் எண்ணெயில் ஈரப்பதம் இருப்பதால் சருமத்துக்கு நல்லது. இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் சீரடைந்து சருமத்தில் தழும்புகள் மறையும்.

கொஞ்சமாக ஆலிவ் எண்ணெய் எடுத்து, உள்ளங்கையில் ஊற்றி, தடவி, 15 நிமிடங்களுக்கு மெதுவாக வயிற்றில் மசாஜ் செய்யுங்கள்.

இரவில் பூசிக் கொள்ளலாம். காலையில் குளித்துவிடலாம்.

#2. விட்டமின் இ எண்ணெய்

கடைகளில் கேப்சுயூல் அல்லது எண்ணெய் வடிவிலே கிடைக்கும்.

அதை எடுத்து நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்சரைசருடன் ஒரு கேப்சுயூலை பிரித்து அதில் உள்ள எண்ணெயைக் கலந்து பூசி வரலாம்.

தொடர்ந்து பயன்படுத்தினால் தழும்பின் நிறம் மாறிக் கொண்டே வரும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.

இரவில் பூசிக் கொள்ளலாம். காலையில் குளித்துவிடலாம்.

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?

#3. விளக்கெண்ணெய்

சுத்தமான விளக்கெண்ணெய் கொஞ்சம் எடுத்து வயிற்றில் பூசி 10-15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

பிளாஸ்டிக் கவர் எடுத்து வயிற்றில் மேல் போட்டு, சுடுநீர் இருக்கும் பாட்டிலை அப்படியே உருட்டவும். சருமத்துளைகளில் எண்ணெய் செல்லும். சில மாதங்களுக்கு உள்ளே நல்ல பலன்கள் தெரியும்.

ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

#4. எசன்ஷியல் ஆயில் (Essential Oils)

தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் தலா 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் லாவண்டர், ரோஸ் எசன்ஷியல் ஆயில் 3 சொட்டு கலந்துக் கொள்ளுங்கள்.

நன்றாகக் கலக்கி, இந்த எண்ணெயை வயிற்றில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை… தேவையான சத்துகள் என்னென்ன? எவ்வளவு?

#5. கற்றாழை

Image Source : Credit Bodybuilding.com

மார்க்கெட்டில் கிடைக்கும் ஆலுவேரா கிரீமைவிட வீட்டில் கற்றாழை செடியிலிருந்து அதன் ஜெல்லை எடுங்கள்.
கற்றாழை ஒரு மடலை எடுத்து முட்களை நீக்கி இருபக்கமும் தோல் சீவி, அதன் ஜெல்லை எடுத்து நன்கு வயிற்றில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

தேவைப்படுபவர்கள் இதில் ஒரு விட்டமின் இ கேப்சுயூல் சேர்த்துக் கொண்டு தடவி வரலாம்.

இதையும் படிக்க: குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்களுக்கு எந்த கழிப்பறை சிறந்தது? அறிவியல் என்ன சொல்கிறது?

#6. தேன்

பஞ்சை எடுத்து அதில் தேனை நனைத்து, ஸ்ட்ரெச் மார்க் மேல் தடவவும்.

நன்றாக உலர்ந்த பின் இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

இதிலே தேனுடன் நீங்கள் உப்பு, கொஞ்சமாக கிளிரசின் கலந்து பூசலாம். பூசியவை உலர்ந்த பின் இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

#7. சர்க்கரை

அடர்நிறமாக இருக்கும் தழும்பை மெல்ல மெல்ல குறைப்பதில் பெஸ்ட் சர்க்கரை.

பாதாம் எண்ணெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை,எலுமிச்சை சாறு 5 துளிகள் கலந்து ஸ்க்ரப் தயாரிக்கவும்.

ஒரு மாதத்துக்குத் தொடர்ந்து இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்திய பிறகு குளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.

#8. எலுமிச்சை ஜூஸ்

Image Source : Credit kombuchahome.com

இதையும் படிக்க: ஒரே மாதத்தில் பளபளப்பான சருமம்… 10 புதுமையான இயற்கை சிகிச்சைகள்…

எலுமிச்சை பழத்தை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.

10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

தினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.

#9. வெள்ளரி ஜூஸ்

வெள்ளரியை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.

10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

தினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.

#10. உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கை அறிந்து, அதில் ஜூஸை எடுத்து அதைப் பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்க்கின் மேல் பூசவும்.

ஜூஸ் எடுக்க முடியவில்லை என்றால் அதன் சதைப்பகுதியை நன்கு மசித்துப் பூசவும்.

10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

தினமும் இப்படி செய்து வர விரைவில் பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிக்க: நகத்தின் நிறத்தைப் பார்த்தே நோயை கண்டுபிடிக்கலாம்?

#11. பால், இளநீர் மசாஜ்

Image Source : Credit worldatlas.com

2 ஸ்பூன் காய்ச்சாத பால், எலுமிச்சை ஜூஸ் மற்றும் வெள்ளரி ஜூஸ் ½ ஸ்பூன், சர்க்கரை ½ ஸ்பூன். இவற்றைக் கலந்து ஸ்ட்ரெச் மார்கில் தடவவும்.

கிளாக்வைஸாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவவும்.

பின் இளநீரை பஞ்சில் நனைத்து ஸ்ட்ரெச் மார்கின் மீது பூசவும்.

20 நிமிடங்கள் கழித்து, அதன் மேலே ஆலுவேரா ஜெல்லை பூசவும்.

அதன் பிறகு சாதாரண தண்ணீரில் கழுவி விடவும்.

எப்போதும் நீங்கள் பூசுகின்ற மாஸ்சரைசரை பூசலாம்.

வாரத்துக்கு 3 முறை இதை செய்து வரலாம். விரைவில் பலன் தெரியும்.

ஸ்ட்ரெச் மார்க் தடுக்க, தவிர்க்க

  • கர்ப்பக்காலத்தில் நிறைய காய்கறி, கீரைகள், பழச்சாறுகள், இளநீர் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும்.
  • உங்கள் அம்மா, பாட்டி, சித்தி, பெரிம்மா, அக்கா ஆகியோருக்கு ஸ்ட்ரெச் மார்க் இருந்தால், நீங்கள் சரும மருத்துவரிடம் சென்று நல்ல கிரீம் வாங்கி பூசுங்கள்.
  • கற்றாழை, ஓட்ஸ், கொகோ பட்டர், ஓட் மீல், ஆக்வா போன்றவை கலந்த கிரீம்கள் நல்லது. ஆனால் இதை மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்.
  • பிரசவத்துக்குப் பிறகு ஃபிட்னெஸ் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
  • சிசேரியன் செய்தவர்கள், மருத்துவர் அனுமதியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது…

Related posts

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…

தாய்ப்பால் அதிகரிக்க 13 வீட்டுக் குறிப்புகள்

தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 11 முக்கிய விஷயங்கள்…