உடல் எடையை குறைப்பது சவாலான விஷயம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடுதலும் கொஞ்சம் ஹெல்த்துக்கான விழிப்புணர்வு இருந்தாலே போதும். எடையைக் குறைக்க முடியும். உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான சில ரெசிபிகளை சாப்பிட்டால் எடையும் குறையும். அதே சமயம் அதிக பசியும் எடுக்காது. சிறந்த ரெசிபிகளை செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
வெயிட் லாஸ் ரெசிபி
#1. எடையை குறைக்கும் தினை கிச்சடி
தேவையானவை
- துருவிய கேரட் – ½ கப்
- பாசி பருப்பு – ¾ கப்
- தினை – ¾ கப்
- நெய் – 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- இந்துப்பு – சிறிதளவு
செய்முறை
- தினையும் பாசி பருப்பையும் நன்கு கழுவி 20 நிமிடங்களாவது ஊற வைக்கவும்.
- குக்கரில் நெய் ஊற்றி சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும்.
- துருவிய கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின், ஊறவைத்த தினை, பாசி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான இந்துப்பு சேர்க்கவும்.
- தேவையான அளவு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவிடவும்.
- இறக்கும்முன் கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
- இதை இரவிலோ பகலிலோ சாப்பிடலாம்.
பலன்கள்
- வயிறு நிரம்பிய உணர்வைத் தரும்.
- அதேசமயம் எடை அதிகரிக்க விடாது.
- சீரான எடையை பராமரிக்க உதவும்.
- தினையில் உள்ள சத்துகள் கெட்ட கொழுப்பை நீக்கும்.
#2. டூ இன் ஒன் வெயிட்லாஸ் சாலட் ரெசிபி
தேவையானவை
- முட்டைக்கோஸ் – ½ கப்
- வெள்ளரி – 1
- கேரட் – 1
- உருளை – 2
- குடமிளகாய் சிறியது – 1
- முந்திரி – 15
- இந்துப்பு – சிறிதளவு
- மிளகுத் தூள் – சிறிதளவு
- அறிந்த கொத்தமல்லி – சிறிதளவு
- பூண்டு – 2
செய்முறை
- காய்கறிகளை சிறியதாக அறிந்து கொள்ளுங்கள்.
- உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- அறிந்த காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- 15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைக்கவும்.
- இதை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.
இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…
பலன்கள்
- நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன.
- மாவுச்சத்தும் உள்ளதால் விரைவில் பசிக்காது.
- நல்ல கொழுப்பும் இருப்பதால் தேவையான சத்து கிடைக்கும். உடல் பலவீனமாகாது. அதுபோல் எடையும் குறையும்.
- சாப்பிட்ட பின் உடனே பசிக்காது. வயிறு நிரம்பும் உணர்வைத் தருவதால் மீண்டும் கிரேவிங் உணர்வு வராது.
#3. வெயிட் லாஸ் ராகி அடை ரெசிபி
தேவையானவை
- ராகி மாவு – 3/4 கப்
- நறுக்கிய வெங்காயம் – 1
- ரவை – 1 டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
- துருவிய கேரட் – ¼ கப்
- முருங்கை இலை – ¼ கப்
- இந்துப்பு – சிறிதளவு
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
செய்முறை
- பவுலில் ராகி மாவுடன் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
- தவாவை சூடாக்கி அடைப்போல தட்டி இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் ராகி அடை தயார்.
- சட்னியுடன் சாப்பிடலாம்.
பலன்கள்
- பசியும் தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது.
- உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
- சருமமும் அழகாகும்.
இதையும் படிக்க: மறந்துவிட்ட 5 முக்கிய ஊட்டச்சத்துகள்… இந்த உணவுகளை சாப்பிட்டால் சில நோய்கள் வராது…
#4. கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெசிபி
தேவையானவை
- வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப்
- துருவிய கேரட் – ¼ கப்
- அறிந்த கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 1
- தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கடுகு, உளுந்து – சிறிதளவு
- இந்துப்பு – சிறிதளவு
செய்முறை
- எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
- வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இதில் வேகவைத்த கொண்டைக்கடலையுடன் துருவிய தேங்காய், கேரட், இந்துப்பு சேர்க்கவும்.
- கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
- இதை மதிய உணவாக சாப்பிடலாம்.
பலன்கள்
- வயிறு நிரம்பும். மாவுச்சத்து நிறைந்துள்ளது.
- உடல் எடை குறைக்க உதவும்.
இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?
#5. பச்சைப்பயறு தோசை வெயிட் லாஸ் ரெசிபி
தேவையானவை
- பச்சைப்பயறு – 1 கப்
- சின்ன வெங்காயம் – 5
- இஞ்சி – ஒரு துண்டு
- பூண்டு – 1
- காய்ந்த மிளகாய் – 2
- கறிவேப்பிலை – 1 கொத்து
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
செய்முறை
- 6 மணி நேரமாவது பச்சைப்பயறை ஊற வைத்துக்கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் பச்சைப்பயறுடன் அனைத்தையும் போட்டு நன்றாக மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.
- சிறிது நீர் சேர்த்து மாவாக கலக்கி கொள்ளவும்.
- சூடான தவாவில் தோசை போல ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- வெங்காய சட்னியுடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்
- உடல் எடை சீராக பராமரிக்க உதவும்.
- வயிற்றுக்கு நல்லது.
- எடை அதிகரிக்க விடாது. நன்கு பசி தாங்கும்.
- காலையில் இரவில் சாப்பிட ஏற்றது.