பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக் | Protein Rich Hair Packs in Tamil

பிரசவத்துக்கு பிறகான முடி உதிர்தலைத் தடுக்கும் 4 வகை புரோட்டீன் ஹேர் பேக்

முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…

4 வகை புரோட்டீன் ஹேர் பேக் மற்றும் ஹேர் மாஸ்க்

புரோட்டீன் ரிச் ஹேர் பேக் 1

தேவையானவை

  • வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
  • தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.
  • இதை ஒரு பவுலில் போட்டு கொள்ளுங்கள்.
  • முடியில் மண்டையின் வேர்கால்களிலும் தடவலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு:

  • சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம்.
  • வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.

பலன்கள்

  • முடி பிளவுகள் தடுக்கப்படும்.
  • கேசம் சில்கியாக மாறும்.
  • முடி உதிர்தல் நிற்கும்.
  • முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.

புரோட்டீன் ஹேர் பேக் 2

தேவையானவை

  • உளுந்து – ½ கப்
  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கைப்பிடி

செய்முறை

  • உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை முதல் நாள் இரவே நீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  • அடுத்த நாள் அதை மிக்ஸியில் அரைத்து கூழாக்கி கொள்ளவும்.
  • இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

குறிப்பு

  • தலைவலி, சளி, சைனஸ் இருப்பவர்கள் 15 நிமிடங்களுக்கு மேல் இந்த பேக்கை வைத்துக்கொள்ள வேண்டாம்.
  • வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தலாம்.
  • இதை அலச மிதமான ஷாம்புவை பயன்படுத்தலாம்.

பலன்கள்

  • தீவிரமான முடி உதிர்தல் பிரச்னை இருந்தாலும் இந்த ஹேர் பேக் பயன்படுத்த சரியாகிவிடும்.

புரோட்டீன் ஹேர் மாஸ்க் 3

தேவையானவை

  • வாழைப்பழம் – 1
  • தேங்காய்ப் பால் – 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை

  • இதை எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து கூழாக்கி கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளலாம்.
  • இதை முடி மற்றும் மண்டையின் வேர் கால்களிலும் தடவலாம்.
  • 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.

குறிப்பு

  • அனைவரும் பயன்படுத்த ஏற்றது.
  • இதை அலச ஷாம்பு, கண்டிஷனர்கூட பயன்படுத்தலாம்.

பலன்கள்

  • அடங்காத முடியும் அடங்கும். சில்கியாக மாறும்.
  • முடி உதிர்தல் நிற்கும்.
  • முடியின் அடர்த்தியும் அதிகமாகும்.
  • கட்டுக்கு அடங்காத முடி உள்ளவர்களுக்கு, இந்த பேக்கால் நல்ல மாற்றம் தெரியும்.

புரோட்டீன் விட்டமின் ஹேர் மாஸ்க் 4

தேவையானவை

  • செம்பருத்தி பவுடர் – 2 டீஸ்பூன்
  • நெல்லி – 4
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • வாழைப்பழம் – ¼

செய்முறை

  • ஒரு பவுலில் வாழைப்பழத்தை போட்டு கூழாக்கி கொள்ளவும்.
  • அதில் நெல்லி ஜூஸை ஊற்றவும். நெல்லிக்காயை அறிந்து ஜூஸாக்கி வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும்.
  • இதனுடன் செம்பருத்தி பவுடர், தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்டாக்கவும்.
  • இதை முடி, மண்டையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

பலன்கள்

  • முடி உதிர்தல் விரைவில் நிக்கும்.
  • முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
  • முடியின் அடர்த்தியும் சீராகும்.
  • மிருதுவான முடியாக மாறும்.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…