பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம் | Home Remedies for Sagging Breast in Tamil

பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். இது இயல்புதான். குழந்தைகள் பால் குடிப்பதால் நடக்கும் மாற்றம். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். இதற்கு துணையாக, தாங்கி பிடிக்க பெண்களின் உள்ளாடை (பிரா) ஓரளவுக்கு உதவும். சௌகரியமான உள்ளாடையை அணிவது மிக முக்கியம். மேலும், மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஏன் மார்பகங்கள் தளர்வடைகின்றன?

மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன.

வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும்.

பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன.

குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும்.

உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மார்பகங்களை ஓரளவுக்கு தளர்வடையாமல் தடுக்கலாம்.

கர்ப்பமான பின் மார்பகங்களின் அளவு பெரிசாகும் பிரசவத்துக்கு பின் பால் ஊட்டுவதை நிறுத்திய பின் மார்பகங்களின் அளவில் மாற்றம் நடக்கும். இதனால் சருமத்தில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.

மார்பகங்கள் தளர்வாகுவதை தடுப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் மாதம் 2-3 கிலோ என மெதுவாக, நிதானமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம். ஒரே மாதத்தில் அதிக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடும்.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, விரைவில் மார்பகங்கள் தளரும். புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம்.

அதிக உடல் எடை இருந்தால் அதைக் குறைக்க பாருங்கள். அதிக குண்டாக இருந்தால், பெரிய மார்பகங்களாக மாறி கொண்டே வரும். தளர்வதும் விரைவில் ஏற்படும்.

சரியான அளவில் பிராவை அணிவது நல்லது. இரவில் தூங்கும்போது மட்டும் பிராவை தவிர்க்கலாம்.

தாய்மார்களின் மார்பகங்கள் தளராமல் இருக்க இயற்கை வழிகள்…

புஜங்காசனா

Image Source : Yoga U Online

  • புஜங்கா என்றால் கோப்ரா (பாம்பு). பாம்பு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல பார்ப்பதற்கு தெரியும் இந்த ஆசனத்தின் செயல்முறை.
  • எளிமையான ஆசனம் என்பதால் அனைவராலும் செய்ய முடியும்.
  • குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். கால்கள் சரியாக நீட்டி இருக்கட்டும்.
  • கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
  • உங்களது கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வாருங்கள்.
  • அப்படியே மெதுவாக மூச்சு இழுத்தபடி தலை, தோள்பட்டை, மார்பகங்கள், நெஞ்சு, வயிறு பகுதியை தூக்குங்கள்.
  • இடுப்பு, தொடை, கால்கள் தரையிலே பதிந்திருக்க வேண்டும்.
  • 10 நொடி மூச்சை ஹோல்ட் செய்த பின் பிறகு மெதுவாக மூச்சைவிட்டபடி முன்னே இருந்த அதே நிலையில் கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
  • இதுபோல 3 முறை செய்யுங்கள்.

யார் செய்யவேண்டாம்?

கர்ப்பிணிகள், முதுகுத்தண்டுவடத்தில் பிரச்னை இருப்போர், தலைவலி இருப்போர், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கார்பல் டனல் சிண்ட்ரோம் பிரச்னை இருப்போர் தவிர்க்கலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், பிரசவத்துக்கு பிறகான ஒரு வருடம் கழித்து இந்தப் பயிற்சியை செய்ய தொடங்குங்கள்.

பலன்கள்

  • தளர்ந்த மார்பகங்கள் டைட்டாகும்.
  • குறைந்தது 3-4 மாதங்கள் வரை சரியாக செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
  • தோள்ப்பட்டை உறுதியாகும்.
  • பின் இடுப்பு சதை கரையும்.
  • ஆஸ்துமா பிரச்னை தீரும்.
  • செரிமானம் சீராக நடக்கும்.

இதையும் படிக்க : நீங்காத ஸ்ட்ரெச் மார்க்ஸ்கூட நீங்கும்… இயற்கை வழி வைத்தியம் 

ஐஸ் மசாஜ்

  • ஐஸ் மசாஜ் செய்தால் தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவும்.
  • 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து, கட்டி, ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். அதற்கு மேல் செய்தால், மறுத்துபோகிவிடும். எனவே ஒரு நிமிடம் போதும்.
  • சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • உலர்ந்த, சாஃப்டான துணியால் துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
  • பின்னே சாய்ந்த சேர் அல்லது தலையணை வைத்தோ 30 நிமிடங்களுக்கு சாய்ந்து கொள்ளுங்கள்.
  • இதுபோல தினமும் 2 முறை செய்யுங்கள்.
  • 3 மாதம் கழித்து உங்களுக்கு மாற்றம் தெரியும்.

ஆலிவ் எண்ணெய்

  • உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும்.
  • வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
  • ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க : பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

ஹெர்பல் மாஸ்க்

  • சிறிய வெள்ளரிக்காயின் ப்யூரி, 1 டீஸ்பூன் வெண்ணெய், ஒரு மஞ்சள் கரு இவற்றை கலந்து பேஸ்டாக செய்து கொள்ளுங்கள்.
  • இதை மார்பகங்களில் பூசி கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவி விடலாம்.
  • ஒரு வாரத்துக்கு ஒரு முறை என இந்த மாஸ்கை போடலாம். மார்பக தசைகள் டைட்டாகும்.

வெள்ளை முட்டை மாஸ்க்

  • ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
  • வாரம் இருமுறை செய்து வரலாம்.

மாதுளை விதை எண்ணெய்

  • மாதுளை விதை எண்ணெய் கிடைத்தால், தேவையான அளவு எடுத்து கீழிருந்து மேலாக மசாஜ் செய்யுங்கள்.
  • 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம்.
  • தினமும் ஒரு முறை செய்யுங்கள்.

இதையும் படிக்க : நகங்கள் காட்டும் நோய் அறிகுறி… நகங்களைப் பராமரிப்பது எப்படி?

வெந்தயம் மாஸ்க்

Image Source : Chilli wizards

  • ஊறவைத்த ¼ கப் வெந்தவயத்தை சிறிது தண்ணீர் தெளித்து திக்கான பேஸ்டாக்கி கொள்ளுங்கள்.
  • இந்த பேஸ்ட்டை மார்பகங்களில் பூசி 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விடலாம்.
  • வாரம் இருமுறை செய்து வரலாம்.
  • மார்பக தசைகள் டைட் ஆகும்.

ஆலுவேரா ஜெல்

  • கற்றாழை ஜெல் தேவையான அளவு எடுத்து கீழிருந்து மேலாக மசாஜ் செய்யுங்கள்.
  • 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம்.
  • சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • வாரம் 4 முறை செய்யலாம்.

இதையும் படிக்க : சிசேரியனுக்கு பிறகு தாய்மார்கள் விரைவில் குணமாக 24 டிப்ஸ் 

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை…

  • அதிகமான டயட்டில் இருக்கவே கூடாது.
  • உணவை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
  • நேரம் கிடைக்கும் நீச்சல் அடிக்கலாம்.
  • ஜாகிங், ரன்னிங் போன்றவை செய்ய வேண்டாம்.
  • வாக்கிங் சென்றால் சரியான டைட்டான பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
  • எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.
  • கூன்போட்டு நடக்க வேண்டாம்.
  • ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்.
  • பிராவை சரியான அளவில் அணிவது மிக மிக முக்கியம்.

இதையும் படிக்க : உடல் எடையை குறைக்கும் 3 ஹெல்தி பானங்கள்… 

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…