உடல் எடையைத் தேற்றுவது, நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது ஆகியவை குழந்தைப் பருவத்தில் இருந்தே இருக்க வேண்டும். குழந்தை பருவத்தில் சரியான கவனிப்பு, ஊட்டச்சத்துகள் இல்லாத உணவுகள் கொடுக்காமல் தவறுவது போன்றவை குழந்தையின் உடலைப் பாதிக்கும்.
சிரு குழந்தையாக இருக்கும்போதே, உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் அதை ‘ப்ரைமரி காம்ப்ளக்ஸ்’ என்று சொல்வார்கள். இந்தியாவில் பல குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதற்கு இந்த ‘ப்ரைமரி காம்ப்ளக்ஸ்தான்’ பிரச்னையாக இருக்கும்.
சின்னச்சிறு குழந்தைகளை நாம் சரியாக கவனிக்காவிட்டால் வளர்ந்த பின்னும் அவர்கள் உடல் மெலிந்தே காணப்படுவார்கள்.
உடலைத் தேற்றும் சத்தான கஞ்சி…
சிறு குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகளுக்கான கஞ்சி வகை இது.
சிறு குழந்தைகளுக்கு காலை வேளையில் சத்து மாவு கஞ்சி தர வேண்டும்.
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, அரிசி, தேங்காய்ப் பால் கஞ்சி தரலாம்.
கஞ்சி செய்முறை
புழுங்கல் அரிசியை உடைத்துக் கொள்ளுங்கள்.
கால் பங்கு பாசிப்பயறை வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் போட்டு உடைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில், கனமான பாத்திரம் வைத்து அதில் உடைத்த அரிசி மற்றும் பருப்பு போட்டு காய்ச்சவும்.
மேலும், அதில் தேங்காய் பால், பசு நெய், வெல்லம் சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
வாரம் 3 முறை, இதே கஞ்சியைக் கொடுத்து வருவது நல்லது.
எள்ளு
‘இளைத்தவனுக்கு எள்ளு கொடுக்கலாம்’ என்பார்கள்.
நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு, எள்ளு துவையல் செய்து ஊட்டி விடலாம்.
எள்ளு உருண்டையைத் தினமும் ஒன்று எனக் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.
எள்ளுப் பொடியை செய்து வைத்துக்கொள்ளுங்கள். இட்லிக்குத் தொட்டு சாப்பிட குழந்தைகளைப் பழக்கப்படுத்துங்கள்.
உளுந்து
உடலைத் தேற்றி, ஆரோக்கியமான எடையை அதிகரிப்பதில் உளுந்து சிறப்பானது.
பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவை செய்து கொடுக்கலாம்.
உளுந்து கஞ்சி, உளுந்து பருப்பு பொடி, உளுந்து சாதம், உளுந்து துவையல், உளுந்து வடை எனச் சாப்பிட கொடுக்கலாம்.
Image Source : find you answer
பள்ளி மாணவர்களுக்கு அல்சர் தொல்லை
பல குழந்தைகள் காலையும் மதியமும் சரியாக சாப்பிடுவது இல்லை.
இவர்களுக்கு அல்சர் எனும் வயிற்றுப்புண் பிரச்னை இருக்கலாம்.
வயிற்றில் புண் இருந்தாலும் உடல் எடை அதிகரிக்காமல் நோஞ்சானாக இருப்பார்கள்.
இவர்களுக்கு, காலை வேளையில், புழுங்கல் அரிசி, வெந்தயம், சீரகம் போட்ட கஞ்சி கொடுக்கலாம்.
மதியம், மோர் சாப்பிட கொடுக்கலாம்.
மாலையில் கட்டாயம் 1-2 வாழைப்பழம் சாப்பிட தரலாம். மோரீஸ், பச்சைப்பழம் தவிர்க்கவும். தேனுடன் வாழைப்பழத்தைக் கொடுப்பது மிக மிக நல்லது.
வாரம் 2 முறை தேங்காய்ப்பால் கொடுக்கலாம்.
மணத்தக்காளி கீரை கூட்டு, சூப் செய்து கொடுக்கலாம்.
எது சாப்பிட்டாலும் மலம் கழிக்கும் உணர்வு வரும் பிரச்னை
பள்ளி குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருக்கக்கூடும்.
சுண்டைவற்றல் செய்து கொடுக்கலாம். சுண்டைவற்றல் குழம்பு, சுண்டைக்காய் சாம்பார் செய்து தரலாம்.
கறிவேப்பிலை துவையல், சட்னி, பொடி, குழம்பு எனச் சமைத்து தரலாம்.
மாதுளை பழங்களை வாரம் 4 முறையாவது சாப்பிட கொடுக்கலாம்.
6+ மாத குழந்தைகள் உணவு
அரிசி, பாசிப் பருப்பு சேர்த்த கஞ்சி
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி
நேந்திரப்பழ கஞ்சி
இதையும் படிக்க: குழந்தையின் எடையை அதிகரிக்கும் நேந்திரம் பொடி செய்வது எப்படி?
கீரை சாதம், கீரை கிச்சடி
அரிசி, வரகு, குதிரைவாலி, தினை கஞ்சி அல்லது கூழ் அல்லது களி உணவுகள்
இதையும் படிக்க: குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி
காய்கறி சூப், சிக்கன் சூப் கொடுக்கலாம்.
இதையும் படிக்க: பேபீஸ் ஸ்பெஷல்… 10 நிமிடங்களில் செய்யகூடிய 5 சூப் ரெசிபி…
அவல் உணவுகளை செய்து தரலாம்.
இதையும் படிக்க: குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் மிக்க 5 அவல் ரெசிபி
தவிர்க்க வேண்டிய உணவுகள்
மில்க் சாக்லேட்
அதிகம் புளித்த தயிர் சாதம்
எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு
வெள்ளை சர்க்கரை
சேர்க்க வேண்டிய இனிப்புகள்
வெல்லம்
கருப்பட்டி
தேன்
பனங்கற்கண்டு
நாட்டு சர்க்கரை
மேற்சொன்ன இனிப்புகளால் செய்த இலை அடை, கொழுக்கட்டை
அடை பிரதமன் இனிப்பு ரெசிப்பி
பாயாசம் வகைகள்
ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம் வகைகள்
இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்
அல்வா வகைகள்
இதையும் படிக்க: டைம் சேவிங் முறையில் குழந்தைகளை அசத்தும் 5 வகையான அல்வா ரெசிபி…
Image Source : bbc good food
குழந்தைகளுக்கு தர வேண்டிய கீரைகள் லிஸ்ட்
முருங்கைக்கீரை – கேரட்டை விட அதிக சத்துள்ள உணவு
சிறுகீரை
அரைக்கீரை
காய்கறி மற்றும் பழங்கள் லிஸ்ட்…
உருளை மற்றும் சேனைக்கிழங்கு – உடல் எடை அதிகரிக்க உதவும்.
நேந்திரம் பழம்
மலை வாழை
கூழாஞ்செண்டு
மட்டி
கோழிக்கூடு வகை வாழைப்பழங்கள் நல்லது.
நம் ஊர் சிவப்பு கொய்யா
மாதுளை
ஆரஞ்சு
பப்பாளி
திராட்சை
மாம்பழம்
குழந்தைக்கு தர வேண்டிய முக்கிய உணவுகள்
பசு நெய் கலந்த பருப்பு சாதம்
தேங்காய் எண்ணெய்
மிளகு மற்றும் சீரகம்
இதையும் படிக்க: தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்…