குழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. ஹெல்தி, டேஸ்டி சூப் செய்வது எப்படி எனப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதை தயாரிப்பதற்கான நேரமும் மிகவும் குறைவுதான்.
குழந்தைகளுக்கான 5 சூப் வகைகள்
#1.தக்காளி சூப்
தேவையானவை
- தக்காளி – 2
- பிரவுன் சர்க்கரை – ½ டீஸ்பூன்
- இந்துப்பு – ஒரு சிட்டிகை
- சோள மாவு – ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- தண்ணீரில் தக்காளியை முழுதாக வேகவைத்துத் தோலை நீக்கவும்.
- பிறகு தக்காளியை மையாக அரைத்து, அதில் இந்துப்பு, பிரவுன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
- சோள மாவையும் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க வைத்த பின் மிளகுத் தூள்வ் கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
- இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம். 1+ வயது குழந்தைக்கு ஏற்றது.
குறிப்பு:
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் உப்பு, சர்க்கரை, சோள மாவு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி
#2.சிறுகீரை சூப்
தேவையானவை
- மிகவும் பொடியாக நறுக்கிய சிறுகீரை – 1/2 கப்
- பருப்பு தண்ணீர் – 1 கப்
- மிளகு, மஞ்சள் தூள் – தலா ஒரு சிட்டிகை
- இந்துப்பு – ஒரு சிட்டிகை
- சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை
- பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- இறக்கும் முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கிவிடலாம்.
- 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு:
- சிறுகீரை, பருப்பு கீரை எனக் குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: 6 – 9 மாத குழந்தைகளுக்கான 15 கூழ் (Puree Recipes) ரெசிபி வகைகள்
#3.கார்ன் சூப்
தேவையானவை
- வேகவைத்த கார்ன் – 1 கப்
- மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
- இந்துப்பு – தேவையான அளவு
- வெண்ணெய் – ¼ டீஸ்பூன்
- சோள மாவு – 1 டீஸ்பூன்
- அறிந்த சிறு தக்காளி – 1
- நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- வேகவைத்த கார்னை வெண்ணெய் போட்டு வதக்கவும்.
- லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் சோள மாவை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வாணலியில் ஊற்றவும்.
- 10 நிமிடங்கள் கொதித்ததும் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கலாம்.
- 2+ வயது குழந்தைக்கு தரலாம்.
- குறிப்பு: குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப இனிப்பு கார்ன் கூட சேர்க்கலாம்.
1 வயது குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒன்றிரண்டாக சோளத்தை அரைத்து கொள்ளலாம். - ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…
#4.காய்கறி சூப்
தேவையானவை
- வேகவைத்த காலிஃப்ளவர், பட்டாணி, கோஸ் சேர்த்து – 1 கப்
- வேகவைத்த தக்காளி – 1
- நெய் – 2 டீஸ்பூன்
- மிளகுத் தூள், இந்துப்பு – சிறிதளவு
- நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- வேக வைத்த தக்காளியை தோல் உரித்துக் கொள்ளவும்.
- தக்காளியுடன் வேகவைத்த காய்கறிகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- இறக்கும் முன் இந்துப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
- 6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு:
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு உப்பு தவிர்க்கலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…
#5.கேரட் பீட்ரூட் சூப்
தேவையானவை
- கேரட், பீட்ரூட் நறுக்கியது – ½ கப்
- பருப்பு தண்ணீர் – 1 டம்ளர்
- மிளகு தூள் – ஒரு சிட்டிகை
- நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- கேரட், பீட்ரூட்டை நன்கு வேகவைத்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பருப்பு தண்ணீர் சேர்த்து வாணலியில் அரைத்து விழுதையும் சேர்த்துக் கலக்கவும்.
- மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
குறிப்பு:
- 6+ மாத குழந்தைகளுக்கு ஏற்றது.
- ஒரு வயது + குழந்தைகளுக்கு காய்கறியை அரைக்க வேண்டாம்.
- அதுபோல் ஒரு வயது + குழந்தைகளுக்கு சிறிதளவு இந்துப்பு சேர்த்துக் கொடுக்கலாம்.
இதையும் படிக்க: ஹோம்மேட் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?