குழந்தைகளுக்கு பற்கள் இல்லாததால் அவர்களால் சாப்பிட கூடிய வகையில் உணவுகளை செய்து தர வேண்டும். சத்தும் சுவையும் உள்ள அதே சமயம் குழந்தைகளால் சாப்பிட கூடிய ஓர் உணவு இருக்கிறது. பாரம்பர்யமாக பின்பற்றி வரும் ஒரு உணவு வகைதான், களி. இந்த உணவுகளில் சத்துகள் ஏராளம். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவும்கூட. இதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
களி உணவு வகைகள்
#1. அரிசி மாவு களி
தேவையானவை
Image Source : Cooking jingalala
அரிசி மாவு – 1 கப்
மோர் – ½ கப்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
இந்துப்பு – சிறிதளவு
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் – சிறிதளவு
செய்முறை
அரிசி மாவை மோருடன் சேர்த்து நன்கு கரைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும்.
கரைத்து வைத்துள்ள அரிசி மாவை இதில் போட்டு கிளறவும்.
மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
கட்டி சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
சரியானப் பதத்துக்கு வந்த பிறகு இறக்கி விடலாம்.
இதை 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
6+ மாத குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் மோருக்குப் பதிலாக தண்ணீர் சேர்க்கலாம்.
பெரியவர்களுக்காக செய்தால் மோர் மிளகாய் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி
#2. சோள மாவு களி
Image Source : Padhuskitchen
தேவையானவை
சோள மாவு – 100 கி
தண்ணீர் – 2 டம்ளர்
இந்துப்பு – சிறிதளவு
செய்முறை
கனமான பாத்திரத்தில் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
இதில் உப்பு சேர்க்கவும்.
மிதமான தீயில் அடுப்பை வைத்து, கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்துக் கிளறவும்.
அடிக்கடி கிளறி கொண்டே இருக்கவும்.
தண்ணீர் தேவைப்பட தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
10 நிமிடங்கள் வரை நன்கு வேக விடவும்.
தண்ணீரை தொட்டு களியைத் தொட்டால் கையில் ஒட்டாமல் களி இருந்தால் அதுதான் சரியான பதம்.
அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
சோள மாவில் களி செய்தது போல கேழ்வரகு மாவு, கம்பு மாவு, திணை மாவு, கோதுமை மாவு போன்றவற்றிலும் விதவிதமாக களி செய்யலாம்.
இதையும் படிக்க: 8+ மாத குழந்தைகளுக்கான 5 வகை பாயாசம் ரெசிபி
#3. இனிப்பு களி
Image Source : Hungry Forever
பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
குழந்தைக்கு திட்டமிடுவோர், கர்ப்பிணிகள், தாய்மார்கள் சாப்பிட ஏற்றது.
1 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு அவசியம் செய்து கொடுக்கவும்.
சீரற்ற மாதவிடாய் சரியாகும்.
இடுப்பு எலும்புகள் உறுதி பெறும்.
குழந்தையை பெற இடும்பு எலும்புகளுக்கு சக்தி கிடைக்கும்.
தேவையானவை
மாவு தயாரிக்க
பச்சை அரிசி – ½ கிலோ
கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து – 1½ கிலோ
வெந்தயம் – 20 கிராம்
சுக்கு – 10 கிராம்
செய்முறை
உளுந்து, சுக்கு, வெந்தயத்தை லேசாக வறுத்து, அரிசியுடன் சேர்த்துக் கடையில் கொடுத்து, நைசாக இல்லாமல் பதமாகப் பொடித்துக் கொள்ளவும்.
களி தயாரிக்க
தேவையானவை
அரைத்து வைத்துள்ள மாவு – 1 கப்
பனங்கருப்பட்டி – 1 கப்
தண்ணீர் – 3 கப்
நல்லெண்ணெய் – ½ கப்
செய்முறை
தண்ணீரில் தேவையான கருப்பட்டி போட்டு, கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி வைக்கவும்.
வடிகட்டி கருப்பட்டி தண்ணீரை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும்.
பாத்திரத்தில் களி மாவு போட்டு, தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
கலந்து வைத்துள்ள களி மாவைக் கொதிக்கும் கருப்பட்டி நீரில் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடவும்.
பின் அடுப்பை நிறுத்தி விடுங்கள்.
கருப்பட்டி தண்ணீர் மேலாக மிதக்கும். அதை இறுத்துத் தனியாக வைக்கவும்.
மீதியுள்ள வெந்த மாவை ஒரு கரண்டியால் கட்டி இல்லாமல் கிளறவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து, ஏற்கெனவே இறுத்து வைத்துள்ள கருப்பட்டி நீரை இதில் சேர்க்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு கிளறி, கையில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
சூடாறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
இதில் ஏதாவது நட்ஸ், அல்லது சிறிய தேங்காய் துண்டை நடுவில் வைத்துப் பரிமாறலாம்.
குறிப்பு
குழந்தைகளுக்கு கொடுத்தால், நட்ஸ் சேர்க்க வேண்டாம். அவர்கள் விழுங்க சிரமப்படுவார்கள்.
இதையும் படிக்க: 1 வயது+ குழந்தைகளுக்கு ஏற்ற 5 விதவிதமான அவல் ரெசிபி