தினமும் சாத்துக்குடி சாறு குடித்துவந்தால் உடலிலும் சருமத்திலும் என்ன மாற்றமெல்லாம் நடக்கும்?

தினமும் சாத்துக்குடி சாறு குடித்துவந்தால் உடலிலும் சருமத்திலும் என்ன மாற்றமெல்லாம் நடக்கும்?

அலர்ஜியால் வருவது தான் ஆஸ்துமா பிரச்சனை. அதாவது முச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கும் பிரச்சனை. ஒருவர் காலையில் தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், ஆஸ்துமாவில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். ஆய்வு ஒன்றில் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், தொற்றுக்களால் சுவாச பாதை சுருங்குவது தடுக்கப்படுவதோடு, சுவாச பாதையில் உள்ள தசைகளை மென்மையாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக சளி பிடித்திருக்கும் போது ஜூஸ் எதையும் குடிக்கக்கூடாது. ஆனால் சாத்துக்குடி ஜூஸைக் குடிக்கலாம். ஏனென்றால் சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர உட்பொருட்கள், உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தியின் அளவு அதிகரிக்கும்.

கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்பு, பற்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். அவர்களுக்கு சாத்துக்குடி ஏற்றது. சாத்துக்குடியை தினசரி உட்கொள்வதன் மூலம் உடல் பலம் பெறுவதோடு எலும்பு வளர்ச்சியடையும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்