அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும். செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். அதிலும் சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும். சைனஸ், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாசிப்பழத்திற்கு உள்ளது. இதற்கு அதில் வளமாக நிறைந்துள்ள புரோமெலைன் தான் காரணம்.
அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.