படுத்த உடனேயே மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு சைனஸ் பிரச்சனைகள் இருக்கின்றது. சைனஸ் பிரச்சினைகளினால் சிலருக்கு தலைவலி பல்வலி கண் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. சைனஸ் பிரச்சனைகள் பொதுவாக மூச்சுவிடும் மூக்கு துவாரத்தில் கண்ணுக்கு அடியில் பின்னந்தலையில் ஏற்படுகின்றது.
ஆவி பிடிப்பது மிகவும் தற்காலிகமான நிவாரணம் என்றே பலரும் கூறுவர். ஆனால் அது உண்மை அல்ல. ஆவி பிடிப்பது தினமும் நாம் செய்து வந்தால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். ஆவி பிடிப்பதினால் தலையில் மூக்கில் இருக்கும் சளி கொஞ்சம் கொஞ்சமாக உருகி வெளியே வந்துவிடும்.
மிளகில் பலவிதமான நல்ல குணநலன்கள் உள்ளது குறிப்பாக ஜலதோஷம் காய்ச்சல் இருந்தால் நாம் இயற்கை முறையில் செய்யக்கூடிய கசாயத்தில் கூட அதிகமாக மிளகு சேர்த்துக் கொள்வோம். இந்த மிளகு கலந்த டீயை நாம் தினமும் இரண்டு முதல் மூன்று முறை குடித்து வந்தால் ஆஸ்துமா அலர்ஜி சைனஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
யூக்கலிப்டஸ் எண்ணெய் என்பது சைனஸ் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தர வல்லது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி உள்ளது. இது ஒரு இயற்கையான டானிக். சைனஸ் மட்டுமல்லாமல் தலைவலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் யூக்கலிப்டஸ் எண்ணெய் பெரிதளவில் உபயோகம் ஆகிறது.