அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

அரசுப் பேருந்தை திருடி ரூ.60 ஆயிரத்திற்கு விற்ற பலே ஆசாமிகள்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென மாயமானது. விசாரணையில் அந்த பேருந்தை இரண்டு பேர் திருடியது தெரியவந்தது.  இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், திருட்டுப் போன பேருந்து மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள, பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில், விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து அங்கு சென்ற தெலங்கானா போலீசார், ஐதராபாத்தில் திருடப்பட்ட பேருந்து அங்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு  விற்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.

பேருந்தின் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பழைய இருமபுக் கடையில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடையின் உரிமையாளர்களான முகமது நவீத் மற்றும் அப்சல் கனி மற்றும் கடையின் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பேருந்தை திருடி விற்றது ஐதாராபாத்தை சேர்ந்த, சையது அபேத் மற்றும் சையது ஜிகாத் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!