எகுரியது தங்கம் விலை! வாடிக்கையாளர்களுக்கு கசப்பான செய்தி.

எகுரியது தங்கம் விலை! வாடிக்கையாளர்களுக்கு கசப்பான செய்தி.

பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து தங்கம் விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டே வருகிறது. 13 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.544/- அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தூய தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 4,122 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 32,976 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,926/- ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 31,408 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3953/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 31,624/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232/- அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,151/- ஆகவும், ஒரு சவரன் விலை ரூ. 33,208/- ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு:

19.2.2020 – 1 grm – Rs. 4,151/-, 8 grm – 33, 208/- ( 24 கேரட்)

19.2.2020 – 1 grm – Rs. 3,953/-, 8 grm – 31,624/- (22 கேரட்)

வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.51.60 ஆகவும் கிலோவுக்கு ரூ.51,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்