சர்க்கரை வியாதி இருந்தால் என்ன தான் சாப்பிடுவது? பேரிச்சம் பழம் கூட சாப்பிடக்கூடாதா?

சர்க்கரை வியாதி இருந்தால் என்ன தான் சாப்பிடுவது? பேரிச்சம் பழம் கூட சாப்பிடக்கூடாதா?

இதில் இரும்புச்சத்து, அண்டிஆக்சிடன்ட், அதிக அளவில் உள்ளது. மேலும் இது அதிகமான கலோரிகளை கொண்டது. மற்ற உலர் பழங்களை ஒப்பிடும்போது பேரீச்சம் பழங்களில் அதிகமான கலோரிகள் உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் பல பேரிச்சம்பழம் உண்பதை தவிர்க்கவேண்டும் என்று கூறுவார்கள். தினமும் நான்கு அல்லது ஐந்து இதற்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள்.

மருத்துவர்கள் பலரும், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த நார்ச்சத்துகள் அதிகம் தேவைப்படுகிறது என்று கூறுகின்றனர். பொதுவாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் அப்படி பார்க்கையில் பேரிச்சை பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது.

தினமும் இரண்டு முதல் மூன்று பழங்கள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும். ஆனால் பேரீச்சம்பழங்களில் சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் அதில் கலோரிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே தேவையான அளவு உடற்பயிற்சி செய்து கலோரிகளை கரைத்து விட்டால், நீங்கள் பேரிச்சபழம் சாப்பிடுவதில் எந்த பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படாது.

மேலும் எளிதாக ஜீரணம் ஆகக்கூடியதாக திகழ்கிறது. பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், விட்டமின் பி, விட்டமின் பி6, விட்டமின் ஏ, மற்றும் விட்டமின் கே, காப்பர், மெக்னீசியம், ரிபோஃபிளேவின், போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து வழிகிறது. இவைகள் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள ரத்தக் கொதிப்பை சரி செய்து, ரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் தேவை இல்லாத கெட்ட கொலஸ்ட்ரால்களையும் எடுத்து விடும். டைப் 2 டயாபடீஸ் வகைகளுக்கு பேரிச்சபழம் நல்ல மருந்தாக அமைகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்