அடிக்கடி தயிர் சாதமும் சாப்பிடுங்க! ஏன் தெரியுமா?

அடிக்கடி தயிர் சாதமும் சாப்பிடுங்க! ஏன் தெரியுமா?

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்