அந்த வீடியோவானது இப்போது இணையதளத்தில் 2 கோடிக்கும் அதிகமான மக்களால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பல்வேறு இல்லத்தரசிகள் மற்றும் நட்சத்திரங்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் பூண்டு உரிக்கையில் கையில் வாசமும் நகங்களின் இடுக்கில் காயமும் ஏற்படும் அதை தவிர்க்கவும் மிகவும் எளிமையாக பூண்டு உரிக்க வரும் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
#VPestilenZ என்கிற ட்விட்டர் பயனர், “நான் அதிகமாக கொரிய உணவுகளை சமைப்பேன். எனவே அதற்கு பூண்டு அதிகமாக தேவைப்படும். தேவைப்படும் பூண்டை உரிப்பதற்கு இதுதான் சிறந்த வழி” என்று பதிவிட்டு, கூடவே பூண்டை இவ்வாறு உரிக்க வேண்டும் என்றும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் பூண்டின் ஒரு முனையில் கத்தியால் குத்தி எடுக்கும்போது பூண்டின் தோல் தனியேவும் பூண்டு தனியாகவும் பிரிந்து வருகிறது. இந்த செய்முறையை இல்லத்தரசிகள் வீட்டில் பயன்படுத்துமாறும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் அதிகமான முறை பார்த்து ரசித்துள்ளனர். https://twitter.com/VPestilenZ/status/1140437217619390465