வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. வாரம் ஒரு முறையேனும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.

• வாய்ப்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண் இருப்பவர்கள் வெந்தயக்கீரையை சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் குணம் தெரியும்.

• பார்வைக் குறைபாட்டை நீக்கும் சத்துக்களும் சொறி, சிரங்கை நீக்கும் தன்மையும் வெந்தயக் கீரைக்கு உண்டு.

• கட்டி, வீக்கம் மீது வெந்தயக்கீரையை அரைத்து சூடு செய்து பூசினால் விரைந்து குணம் கிடைக்கும்.

• சிறுநீரில் இருக்கும் சர்க்கரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மை வெந்தயக்கீரைக்கு உண்டு.

மூளை நரம்புகளை பலப்படுத்தும் தன்மையும், ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணமும் வெந்தயக் கீரைக்கு உண்டு என்பதால் குழந்தைகளுக்கு நல்லது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்