பொதுவாக நீரிழிவு நோய் வருவதால், ரத்தத்திலிருக்கும்
செல்களைப் பாதிப்பதோடு,
நரம்புகள் செய்யும்
வேலைகளையும் தடுத்து
விடுகிறது. அதனால் கொஞ்சநேரம் காலுக்கு வேலை தரவில்லை என்றாலே மரத்துப் போவதுண்டு. அந்த நேரங்களில் பாதங்களில் ஏற்படும் எரிச்சலையோ
வலியையோகூட உணர்ந்து
கொள்ள முடியாது.
இந்த பிரச்னை எப்போதாவது ஒரு முறை என்றால் அச்சப்பட ஏதும் இல்லை. தொடர்ந்து அடிக்கடி ஏற்படுகிறது என்றால் உடனே நல்ல மருத்துவரை சந்தித்து நீரிழிவு செக்கப் செய்துகொள்ளுங்கள். மேலும் உங்கள் ரத்தத்தில் இருக்கும் க்ளுகோஸ் அளவைக் குறைத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுங்கள்.
உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் தினமும் அரைமணி நேரமாவது எக்சர்சைஸ் செய்து உடல் பருமன் வராமல் தற்காத்துக்கொள்ளுங்கள்.