வெயிலுக்கு மோர் சாப்பிடுங்க!! பெண்களுக்கு வரும் வயிற்றுவலிக்கு நல்லது !

வெயிலுக்கு மோர் சாப்பிடுங்க!! பெண்களுக்கு வரும் வயிற்றுவலிக்கு நல்லது !

தயிரில் தேவையான அளவு நீர் சேர்த்து கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், வெந்தயம் சேர்த்து செய்யப்படும் நீர் மோர், குடிக்கும் பானமாக மட்டுமின்றி மருந்தாகவும் செயலாற்றுகிறது.

·        
உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் நீர் மோர் குடித்தால், உண்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும், அஜீரண கோளாறுகள் நீங்கும்.

·        
வெயிலால் ஏற்படும் நீர்க்கடுப்பு, சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றை நீக்கும் மருந்து மோர்.

·        
மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலியை கட்டுப்படுத்தும் சக்தி மோருக்கு உண்டு.

·        
நம்மை அறியாமல் உடலில் சேரும் விஷத்தன்மை உடைய பொருட்களின் வீரியத்தை குறைக்கும் சக்தியும் மோருக்கு உண்டு.

சளித் தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் மட்டும் மோர் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்