பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு
திறன் மற்றும்
புத்திக்கூர்மையை அதிகரிப்பதில்
வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது.

நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு
புத்துணர்வு அளிக்கவும்,  தெளிவாக
சிந்திக்கும் திறன் வளர்வதற்கும்  வல்லாரை
கீரை உதவி செய்கிறது.
மூளை தொடர்பான
வேதியியல் மாற்றங்களை
இந்தக் கீரை
ஊக்குவிப்பதால், கல்வி
கற்கும் பிள்ளைகளுக்கு
இது அருமருந்தாகும்.
 

பசலைக் கீரைக்கும் நரம்பு பலத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடலுக்கு வலிமை தரக்கூடியது அரைக்கீரை. சோர்வு போக்கும் சக்தி அரைக் கீரைக்கு உண்டு. அதனால் மாணவர்களுக்கு தினம் ஒரு கீரை கொடுத்தால் உடல் நலம் பெறுவதுடன் நல் ஆரோக்கியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!