பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாக காணப்படும் பிரண்டையின் வேர், தண்டு பாகங்கள் பயன் தரக்கூடியவை. மிகுந்த பசி உண்டாக்கும் தன்மை கொண்டது என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றது.

• பிரண்டை தண்டின் தோலை சீவி, சதைப்பகுதியை மட்டும் வேகவைத்து அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டால் மெலிந்த உடல் தேறி, மினுமினுப்புடன் புஷ்டியாகும்.

• பிரண்டைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமானக் கோளாறு நீங்கும். வயிற்றுப்புண் மற்றும் குடல் புழு தொந்தரவு அகலும்.

• பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தை சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் மட்டுப்படும்.

• பிரண்டை வேரை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால் எலும்புகள் பலமடையும், பற்கள் நலமடையும்.

கார்ப்பு, புளிப்பு சுவை நிறைந்த பிரண்டையை ரசம், சாதம், துவையல் போன்ற வகையிலும் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியம் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!