பந்து கிண்ண மூட்டு – குழியான கிண்ணமும் அதன் உள்ளே சுழலும் வகையில் பந்து போல் எலும்பும் அமைந்திருக்கும். உதாரணம் – தோள்பட்டை.
கீல் மூட்டு – வீட்டின் கதவுகள் முன்னும், பின்னும் அசைவது போன்று ஒரு பக்கம் மட்டும் மடக்கி நீட்ட முடியும்.
உதாரணம் – முழங்கை
வழுக்கும், நழுவும் மூட்டுகள் – ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிச் செல்லும். உதாரணம் – மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
‘செக்கு’ மூட்டுகள் – நாலா பக்கமும் அசையும் மூட்டுகள் – உதாரணம் – முதுகெலும்பு