கொத்தவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பது தெரியுமா? கர்ப்பணிகளுக்கு சந்தோஷமான செய்தி.

கொத்தவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பது தெரியுமா? கர்ப்பணிகளுக்கு சந்தோஷமான செய்தி.

கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடிய கொத்தவரங்காய் மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. ஆனால் இதனை நறுக்குவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலரும் இதனை வாங்க விரும்புவதில்லை.

· குறைந்த கலோரியும் அதிக தாதுக்களும் கொண்ட கொத்தவரங்காய் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த  முறையில் உதவுகிறது.

·  ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் கிளைகோநியூட்ரியன்ஸ் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளது.

·  கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகிறது.

·  கொத்தரவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது.

செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்தாகிறது கொத்தவரங்காய். வயிற்றில் சேரும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, செரிமான நோய்கள்  வராமல் காக்கவும் உதவக்கூடியது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்