இளம் பெண் பயன்படுத்திய உள்ளாடைகளை வாங்க போட்டா போட்டி! லட்சக்கணக்கில் விலை போகும் விநோதம்!

இளம் பெண் பயன்படுத்திய உள்ளாடைகளை வாங்க போட்டா போட்டி! லட்சக்கணக்கில் விலை போகும் விநோதம்!

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் சக்கை போடு போடுகிறது. பலவித பொருட்களும், ஆன்லைன் வழியாகவே விற்கப்படுவதால், முன்னணி நிறுவனங்களில் இருந்து, தனிப்பட்ட நபர்கள் வரை அனைவரும், இதில், தங்களது வர்த்தகப் பணிகளை விரிவுபடுத்த பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரு புதிய வர்த்தக முறையை உருவாக்கி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆம். நியூயார்க் யுனிவர்சிட்டியில் படிக்கும் அந்த மாணவி, கடைகளுக்குச் சென்று, மொத்தக்கணக்கில், உள்ளாடைகளை வாங்கி வருவது வழக்கம். இதன்பின், அந்த உள்ளாடைகளை ஒருமுறை அல்லது வாரக்கணக்கில் பயன்படுத்திவிட்டு, அதனை அப்படியே ஆன்லைனில் விற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட உள்ளாடைகளை அணிந்தபடி செல்ஃபி எடுத்து, ஆன்லைனில் பதிவிடும் அந்த 21 வயது மாணவி, எவ்வளவு நாட்கள் ஒரு உள்ளாடையை அணிகிறாரோ, அதன் அடிப்படையில், அவற்றின் விலையை நிர்ணயித்து வருவதாகக் கூறுகிறார். ஒரு ஜோடி உள்ளாடைகளை ரூ.7000 வரை விற்பதாகவும், இதன்மூலமாக, மாதந்தோறும் சுமார் ரூ.1 லட்சம் வரை எளிதாக சம்பாதிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்புது உள்ளாடைகளை வாங்குவதும், அவற்றை விற்பதும் தனக்கு மனநிறைவு அளிப்பதாகவும் குறிப்பிடும் அந்த பெண், இது தவிர,  ஃபேஷன் மாடலாகவும், ஓட்டலில் சர்வராகவும் பணிபுரிந்து, பணம் சம்பாதித்து வருகிறார். ஏற்கனவே பயன்படுத்திய உள்ளாடைகளை தேடி வாங்கவும் ஒரு பெரும் கூட்டம் உள்ளதைத்தான் நம்பவே முடியவில்லை.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!