எப்போது பார்த்தாலும் கோபமும் ஆவேசமும் ஆகும் டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகளை சமாளிக்கும் வழி தெரியுமா?

எப்போது பார்த்தாலும் கோபமும் ஆவேசமும் ஆகும் டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகளை சமாளிக்கும் வழி தெரியுமா?

இதற்காக கோபப்படுவது, அடிப்பது, சண்டை போடுவது சரியான செயல் அல்ல. டீன் ஏஜ் வயதில் தாங்களும் இப்படித்தான் இருந்தோம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.

இதுபோன்ற மாற்றங்கள் இளைய வயதினரிடம் ஏற்படுவது இயல்பானதுதான். இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்தே தீரவேண்டும். அப்போதுதான் ஹார்மோன் சரியானபடி தங்கள் பணியைச் செய்கிறது என்று அர்த்தம்.

அதனால் கோபமும், ஆவேசமும் இயல்பான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் இனியும் அவர்களை சின்னப் பிள்ளைகள் போன்று நடத்தாமல், தோழன், தோழி போன்று நடத்த கற்றுக்கொள்ளுங்கள்.

தங்களுக்குத்தான் எல்லாமே தெரியும், பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்ற மனப்பான்மையில்தான் இருப்பார்கள். அதனை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் சண்டையை, கோபத்தை ரசியுங்கள், ஆனால் திருப்பி சண்டை போடாதீர்கள். இரண்டு முதல் மூன்று வருடங்களில் அவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பிவிடுவார்கள். அதுவரை அன்புடன் அவர்களை வழி நடத்துங்கள்.

உங்களால் சமாளிக்கவே முடியாத பட்சத்தில் ஏதேனும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச்சென்று கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இது உங்களுக்கான கவுன்சிலிங் என்று சொல்லி கூட்டிச்சென்று காரியம் சாதியுங்கள். உங்கள் குழந்தைகளை கோபத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவும் அழகுதான்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்