மாலை சிற்றுண்டிக்கு அவலை இப்படிச் செய்து அசத்துங்க!!!

மாலை சிற்றுண்டிக்கு அவலை இப்படிச் செய்து அசத்துங்க!!!

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த சிவப்பு அவல் – ஒரு கப்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா ஒரு டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு நன்றாக கழுவி சுத்தம் செய்த அவலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

சுவையான, சத்தான அவல்-நட்ஸ் ரெடி

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்