நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசும் மஞ்சள் சூப்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பசும் மஞ்சள் சூப்

அந்த வகையில் இந்த பசும் மஞ்சள் சூப் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். இதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை:

பசும் மஞ்சள் – ஒன்றரை இன்ச்

அளவு துண்டு ஓமவல்லி இலைகள் – 4

துளசி இலைகள் – 10

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகு – 4

பூண்டு – 2 பல்

தோலுரித்த சின்ன வெங்காயம் – 3

தண்ணீர் – ஒரு லிட்டர்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். அதனுடன் ஓமவல்லி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் ஆன பிறகு இறக்கவும். தேவையானபோது லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம்.

இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!