சுந்தர் பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை! உலகம் முழுவதும் வைரல் ஆக இது தான் காரணம்!

சுந்தர் பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை! உலகம் முழுவதும் வைரல் ஆக இது தான் காரணம்!

சுந்தர்பிச்சை தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சுவாரசியமான மற்றும் பயனுள்ள தகவல்களைக் கூறுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் அவர் தான் படித்த ஐ.ஐ.டி. கான்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சொன்ன கரப்பான் பூச்சி கதை வைரலாகி வருகிறது.

அவர் ஒரு ஹோட்டலில் காபி குடித்துக்கொண்டிருந்த போது சற்றுத் தள்ளி ஒரு நண்பர்கள் குழுவினர் அரட்டையடித்தபடி உணவருந்திக்கொண்டிருந்ததாக சுந்தர் பிச்சை தெரிவித்தார். அப்போது அந்தக் குழுவில் இருந்த பெண்ணின் தோளில் ஒரு கரப்பான் பூச்சி வந்து அமர அதிர்ச்சியில் உறைந்த அவர் நடுங்கும் குரலுடன் கத்திக் கூச்சலிட்ட படி கையை உதற, கரப்பான் பூச்சி மற்றொரு பெண் மீது போய் உட்கார்ந்தது. அந்தப் பெண்ணும் அதே வகையான உணர்வுகள் செயல்பாடுகள் மூலம் கரப்பான் பூச்சியை உதறிவிட்டார். 

இந்நிலையில் அந்தக் கரப்பான் பூச்சி ஹோட்டல் பணியாளரின் தோளில் சென்று அமர்ந்தது. ஆனால் அவரிடம் இருந்து மாறுபட்ட உணர்வுகள் செயல்பாடுகள் வெளிப்பட்டன. எந்த பதற்றமும் இன்றி கரப்பான் பூச்சியின் நடமாட்டத்தை கவனித்த அவர், சரியான நேரத்தில் அதனை கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார். 

அந்த பெண்களின் பதற்றத்துக்கும் எதிர்மறை செயல்பாடுகளுக்கும் காரணம் கரப்பான் பூச்சியல்ல; அவர்களின் பயந்த சுபாவம் தான். ஓட்டல் பணியாளரின் தீர்க்கமான மற்றும் பதற்றமற்ற சிந்தனையும் செயல்பாடுமே அந்தப் பூச்சியை பிடிக்க காரணமாக அமைந்தது. 

அந்த நேரத்தில் தான் தனக்கு புதிய சிந்தனை ஏறபட்டதாகக் கூறுகிறார் சுந்தர் பிச்சை. வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது என்றும், நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும் என்றும் கூறுகிறார் .

கரப்பான்பூச்சியை மையமாக கொண்ட இந்தக் கதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி குறித்த ஒரு தெளிவை உருவாக்கும் என்பது உண்மை. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்