கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர்தான் இவ்வாறு செய்துள்ளார். பரீட்சைக்கு தாமதாகிவிட்டதை உணர்ந்த அவர், வேறு எந்த வழியுமின்றி, குதிரையிலேயே தனது பள்ளிக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். உடனடியாக, மறு யோசனையின்றி, குதிரையில் ஏறி, பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், உரிய நேரத்திற்குள் சென்று, நிம்மதியாக பரீட்சை எழுதியுள்ளார்.
அவரது வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும்போது, அம்மாணவி குதிரையேற்றத்தில் நல்ல பயிற்சி உள்ளவர் என தெரிகிறது. குதிரையை தவிர வேறு யாரும் அந்த நேரத்தில் உதவ முடியாது என நினைத்ததால், இம்முடிவை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். இதனை தனது பிடித்தமான வீடியோவாகச் சேமித்து வைக்க உள்ளதாக, ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.