·
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பால் உறிஞ்சும் தன்மை சரியாக இருந்தால் மட்டுமே நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
·
பொதுவாக பால் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், தாய்ப்பால் பீய்ச்சிக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.
·
உறிஞ்சும் பொருளை சப்பவைத்து பழக்குவதன் மூலம் குழந்தையின் உறிஞ்சும் திறனை மேம்படுத்த முடியும்.
·
மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பால் கொடுக்கவேண்டும் என்பதால், பீய்ச்சி எடுத்து கணக்கிட்டுக் கொடுப்பதே சரியானது..
குழந்தையின் எடை அதிகரித்தபிறகே தாய்ப்பால் கொடுக்கவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படியே தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் குழந்தைக்கு பிறந்தவுடன் சர்க்கரை தண்ணீர், தேன் கொடுக்கக்கூடாது.