- குடமிளகாயில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கக்கூடியது. அத்துடன் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.
- வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி6 போன்றவை குடமிளகாயில் அளவுக்கு அதிகமாகவே இருப்பதால் கண் பார்வை கூர்மையடைய உதவுகிறது.
- குடமிளகாயை அவ்வப்போது சமையலில் பயன்படுத்திவந்தால் கூந்தல் பளபளப்படைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.
- கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிரம்பியிருப்பதால் பெண்களின் எலும்புக்கு உறுதுணையாக செயலாற்றுகிறது.