எவ்ளோ சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்குறீங்கன்னு கவலையா? இதோ ஆரோக்கியமான சில வழிகள்!

எவ்ளோ சாப்பிட்டாலும் ரொம்ப ஒல்லியா இருக்குறீங்கன்னு கவலையா? இதோ ஆரோக்கியமான சில வழிகள்!

தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள். காலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இதற்கு பால் வைத்தியம் என்று பெயர். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். சோயா உடல் எடையை அதிகரிக்கும். சோயா மாவில் செய்யப்பட்ட நொருக்குத் தீனிகள், சோயா கலந்த சப்பாத்தி, சோயா எண்ணெய் அல்லது சோயா பால் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுங்கள். பூசணிக்காய், சுரைக்காய், ஆகியவற்றை தவறாமல் வாரம் 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். தினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். இவை புரதம் அதிகம் உள்ளது. இவை சதைப் பிடிப்பை உடலுக்கு அளிப்பவை. எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது. தினமும் ஒரு வாழைப் பழ மில்க் ஷேக் நல்ல வாளிப்பை தரும். மத்தியானம் ஒரு 20 நிமிடங்கள் தூங்கினால் உடல் எடை கணிசமாக கூடும். இது நிருபீக்கப்பட்ட உண்மை. 

அத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்ஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள். வெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும். 
அதிகம் தூங்கக் கூடாது. பின்னர் இரவில் தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட நேரிடும். பீனட் பட்டரை பிரட்டில் தடவி சாப்பிட்ட வேண்டும். தினமும் இப்படி இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும். பாஸ்தா செய்வதற்கு எளிதானது. அதனுடன் காய்கறிகளும் சேர்த்து சமைக்கும்போது அனைத்து ஊட்டச் சத்தும் நமக்கு அளிக்கிறது. ஆகவே வாரம் 2 நாட்கள் பாஸ்தா சாப்பிடுங்கள். தயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்