பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! உடல் நசுங்கி 12 பேர் பலியான பரிதாபம்!

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! உடல் நசுங்கி 12 பேர் பலியான பரிதாபம்!

இமாச்சல் மாநிலத்தின் தல்ஹவுசி பகுதியில் இருந்து பஞ்சாப்பின் பதன்கோட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சம்பா மாவட்டத்தில் உள்ள பன்ச்புலா பாலம் அருகே சென்ற போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது சாலை அருகே உள்ள 200 அடி  பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. உருண்டுச் சென்ற பேருந்து தரையில் விழுந்த போது உடல் நசுங்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு இந்த விபத்து நடந்த நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!