விலை மலிவாக கிடைப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும் சுரைக்காய்க்கு மக்களிடம் மதிப்பு இருப்பதில்லை. 96 சதவிகிதம் நீர்ச்சத்துடன் சோடியம், வைட்டமின்கள் நிறைந்த சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
• உடல் சூடு காரணமாக அவஸ்தைப்படுபவர்கள் சுரைக்காய் சாப்பிட்டுவந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
• சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு என்பதால், சிறுநீர்த் தொற்று நோயைத் தணிக்கிறது.
• சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை சுரைக்காய்க்கு இருப்பதால், அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
• தேமல், வெண்புள்ளி போன்ற தோல் நோய்களுக்கு சுரைக்காயை அரைத்துப் பூசினால் நல்ல மாற்றம் தெரியும்.
பசியை கட்டுப்படுத்தும் சக்தி சுரைக்காய்க்கு உண்டு என்பதால் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதுதவிர தூக்கமின்மை குறையையும் நீக்குகிறது சுரைக்காய்.