·
பிரசவம் நிகழ்ந்ததும் சில பெண்கள் தங்களை அறியாமலே தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாவதைத்தான் பேபி புளூஸ் என்கிறார்கள்.
·
இந்தப் பாதிப்புக்கு ஆளான பெண்கள் காரணம் இல்லாமல் அழத் தொடங்குவார்கள், எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள்.
·
குழந்தையை கவனிப்பது, பால் கொடுப்பது போன்ற விஷயங்களிலும் அக்கறை காட்டாமல் இருப்பார்கள்.
·
இவர்களுக்கு தீவிரமான அரவணைப்பும் கண்காணிப்பும் தேவை. உடனடியாக மனநல மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
காரணமில்லாமல் பெண் அழுகிறாள் என்பதற்காக தனியே விடுவதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் தேவையற்ற எதிர்விளைவுகளையே உண்டாக்கும். அதனால் முழுமையான மருத்துவக் கவனிப்பு மூலம் பிரச்னையை தீர்க்க வேண்டும்.