உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கும் நிலையில், அமெரிக்கவை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததை பற்றியும், அதன் அறிகுறி எப்படி இருந்தது என்பதை குறித்து சமூக ஊடங்கள் மூலம் விளக்கமளித்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் இதுவரைக்கும் சுமார் 1747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய் வல்லரசு நாடான அமெரிக்கவையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்க நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால், அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தடைகள் விதித்துள்ளார்.
இப்படி பாதுகாத்தும் அமெரிக்காவை சேர்ந்த Elizabeth Schneider என்ற பெண் ஒருவருவருக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வைரஸில் இருந்து மீண்டுள்ளார். அது குறித்து தன்னுடைய சமூக வளைதளமான பேஸ்புக் பக்கத்தில் கொரோனாவில் இருந்து எப்படி மீண்டு வந்துள்ளார் என்பதௌ பற்றி பதிவிட்டுள்ளார்.
அந்த பெண் தனது பேஸ்புக் பதிவில், என்னுடைய நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் காரணமாக பதிவிடுகிறேன். ஏனெனில் இது ஒரு நல்ல பதிவாக அமையும் என்ற எண்ணத்தில் பதிவு செய்தேன்.
மேலும், அந்த பெண் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார். அங்கு தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த விருந்து நிகழ்ச்சியில் யாரும், இருமவில்லை, தும்மவில்லை, எந்த ஒரு நோயிக்கான அறிகுறிகளும் அங்கு தென்படவில்லை மேலும், அந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு 40 முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர்.
ஆனால் நான் அவர்கள் அனைவருக்கும் 30 வயதிற்கு மேல் இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறார் அமெரிக்க பெண். இதனையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு பின் 40 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரியவந்துள்ளது. ஊடகங்களில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவினால், கொரோனாவை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
நான் அதை எல்லாம் பின்பற்றினேன். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் இல்லை என்பதை முன்வைகிறார் அமெரிக்க பெண். நிகழ்ச்சியை அடுத்து மூன்று நாட்கள் தொடர் தலைவில், உடல்வலி, மூட்டு வலிகளால் அவதிப்பட்டேன். காய்ச்சலும் இருந்தது, வயிற்று போக்கும் ஏற்பட்டது. பின்னர் மருந்துகள் எடுத்த பின்னர் காய்ச்சல் நின்றுவிட்டது, நாசி நெரிசல், தொண்டை வலி, லேசான அரிப்பு இருமல் இருந்தது. மிகச் சிலருக்கு மார்பு இறுக்கம் அல்லது பிற சுவாச அறிகுறிகள் இருந்தன. இப்படி 10 முதல் 16 நாட்கள் மிகவும் அவதிக்கு உள்ளான பின்னர் இருமல் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.
இதனை குறித்து, சியாட்டில் காய்ச்சல் ஆய்வு மூலம் சோதனை செய்துள்ளார். சியாட்டிலில் என்பது ஒரு ஆராய்ச்சி ஆய்வாகும், அங்கு அவர்கள் சமூகத்திற்குள் பரவுவதைப் படிக்க காய்ச்சல் பாதிப்புக்கு தன்னார்வலர்களை பரிசோதித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்றுக்கான மாதிரிகளை சோதிக்கத் தொடங்கினர். அவர்கள் எனது மாதிரியை உறுதிப்படுத்த கிங் கவுண்டி பொது சுகாதாரத் துறைக்கு அனுப்பினர்.
அந்த மாதிரி ஆராய்ச்சி ஆய்வில் அமெரிக்க பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதாரத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாதித்த பெண்ணிற்கு அறிகுறிகள் தோன்றிய 7 நாட்களுக்குப் பிறகு தனிமையில் இருக்குமாறு கிங் கவுண்டி பொது சுகாதாரத் துறை பரிந்துரைத்தது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனையில் சேர்ப்பதில்லை. அதன் காரணமாக அந்த பெண் சொந்தமாக குணமடைந்து வருகிறாள். மேலும், இது ஒரு மோசமான காய்ச்சல் பாதிப்பு என்று உணர்ந்து, தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
அதில் அவர் கூறுவது, நான் முழுவதும் இதில் இருந்து வெளியே வந்து விடுவேன் என்ற நன்பிக்கை என்னவென்றால், நான் தொடர்ந்து Sudafed-ஐ எடுத்துக்கொண்டேன் Afrin நாசி தெளிப்பைப் பயன்படுத்தினேன் (ஒவ்வொரு நாசியிலும் 3 ஸ்ப்ரேக்கள், ஒரு நேரத்தில் 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் விடுமுறை), மற்றும் ஒரு Neti pot பயன்படுத்தினேன் (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருடன்) என்று தெரிவித்துள்ளார்.
அனைத்தும் கூறிய பெண் எனது சைனஸை தெளிவாக வைத்திருக்கக்கூடும், இந்த அறிகுறிகள் என் நுரையீரலுக்கு பரவாமல் தடுக்கக்கூடும். இது மருத்துவ ஆலோசனை அல்ல, நான் செய்ததை மட்டுமே உங்களுக்கு பகிர்கிறேன், எனக்கு சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் அந்த அமெரிக்க பெண். இவ்வறாக தான் கொரோனா வைரஸில் இருந்து எப்படி மீண்டு வந்துள்ளேன் என்று சமூக வளைதங்களில் பதிவு இட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.