மாத்திரைக்கு நோ... தண்ணீருக்கு எஸ்..! சிறுநீரகத்தைக் காப்பாற்றுவோம்.

மாத்திரைக்கு நோ… தண்ணீருக்கு எஸ்..! சிறுநீரகத்தைக் காப்பாற்றுவோம்.

உலக அளவில் சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தையும், சிறுநீரக பாதிப்பு வராமல் எப்படி தடுப்பது, சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் பிற நோய்களை எப்படி தடுப்பது, வாழ்க்கை முறையில் என்ன மாற்றம் செய்ய வேண்டும், என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கம். 

* உலக அளவில் 850 மில்லியன் மக்கள் பல்வேறு காரணங்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

* chronic kidney disease – உயிரிழப்பில் இந்த நோய்க்கு 6-வது இடம்

* ஒவ்வொரு வருடமும், ஏறக்குறைய 1.7 மில்லியன் மக்கள் சிறுநீரக கோளாறால் உயிரிழக்கிறார்கள். 

Chronic kidney disease (CKD) என்பது சிறுநீரகத்தின் செயல்பாடுகளில் குறைபாட்டினால் ஏற்படுவது. சிறுநீரகத்தின் செயல்பாடு குறைவாக சில மாதத்திற்கோ, வருடத்திற்கோ நீளும் போது அது பழுதடைந்து, உயிருக்கே ஆபத்தாக அமையும். டயாலிசிஸ் அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்துவதே தீர்வு. 

சிறுநீரக கோளாறுகள் வராமல் இருக்க வேண்டியவை –

*தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் 

*வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

* உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

*இறைச்சி, ரெட் மீட், எடுத்துக் கொள்ளக் கூடாது.

* பாக்கெட்களில் அடைத்த, பேக் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுப் பண்டங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.

* பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

* அதிக நேரம் ஒரே இடத்தில்உட்காராமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும்.

-ராமலட்சுமி முருகேசன்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்