இன்று நிம்மதியாக தூங்கியபடி கொண்டாடுங்கள், WORLD SLEEP DAY

இன்று நிம்மதியாக தூங்கியபடி கொண்டாடுங்கள், WORLD SLEEP DAY

World sleep day கமிட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் இந்த தினத்தை கடைபிடிக்கிறார்கள். இந்த வருடத்திற்கான ஸ்லோகன்: “BETTER SLEEP, BETTER LIFE, BETTER PLANET”

மனிதனோட அன்றாடவேலைகளில் தூக்கம் ஒரு முக்கியமான செயல்பாடு. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒவ்வொரு நாளும் 7-8 மணிநேர தூக்கம் அவசியம். ஆனால் அதிகப்படியான வேலைப்பளுவால் இந்த நேரம் குறைகிறது. உடல் உழைப்பு இல்லாமல், எப்போதும் ஒரேஇடத்தில் உட்கார்ந்து கொண்டே பார்க்கும் வேலைகளாலும், சரியான நேரத்தில் முடித்துக்கொடுக்க வேண்டிய கட்டாய வேலைகளாலும், அதிகாலையிலும், பின்இரவுகளிலும் கண்விழிக்க வேண்டியுள்ளது. ஆனால் தூக்கம் மிகவும் முக்கியம்.

ஒரு மனிதன் சராசரியா தன்வாழ்நாள்ல 1/3 பங்கு தூக்கத்துக்காக செலவிடுறான். இது ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தும் மாறுபடும்.

# காலைல படுக்கைல இருந்து எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமா இருந்தா அதுக்கு பேர் Dysania. இது ஒரு chronic fatique syndrome.

# சில நேரம் தூங்கும் போது திடீரென்று உடல் இழுக்கும், இதற்கு Parasomnia.

# பாலூட்டி வகைகளிலே வலுக்கட்டாயமாக தூக்கத்தை தள்ளிப்போடுறது மனிதன் மட்டும் தான்.

#ஒரு நாள்ல மனிதன் ரொம்ப சோர்வா, தூக்கமா உணருர நேரம் 2 AM & 2 PM  

சரியான தூக்கம் இல்லைன்னா நம்மோட ஞாபகசக்தி, யோசிக்கும் தன்மை, கேட்ட கேள்விக்கு தாமதமான பதில், பார்த்தவுடன் புரியும் தன்மை (Visual perception) என எல்லாமே பாதிக்கும், கோபம் அதிகமாகும், உடல் சமநிலை, மன ஒருமுகத்தன்மை பாதிக்கும். கார், லாரி டிரைவர்கள் விபத்து ஏற்படுத்துவதும் இந்த காரணத்தால் தான். உடல் எடை, ப்ரசர், சர்க்கரை அளவு ஆகியவை அதிகரிக்கும். தூக்கம் வர என்ன செய்யலாம்?

*தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திரிப்பதை பழக்கமாக்க வேண்டும்

*தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

*லேசான இரவு உணவு, சீக்கிரமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

*இரவு நேரம் காபி, ஆல்கஹால் எடுக்கக் கூடாது

*காலாற நடந்த பின் அல்லது மெதுவான ரிலாக்சிங் எக்சசைஸ் செய்தபின் தூங்கலாம்.

*ஏதாவது புத்தகம் படிக்கலாம்.

நிம்மதியான வாழ்வுக்கு தேவை……. நல்ல தூக்கம்…. – ராமலட்சுமி முருகேசன்

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!