7 மற்றும் 8 மாத குழந்தையின் வளர்ச்சியும் பாதுகாப்பு முறைகளும்…

எந்தவித துணை இல்லாமல் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் அவர்களின் நடவடிக்கைகளையும் நன்கு கவனியுங்கள். என்னென்ன வளர்ச்சி நிலையை அடைவார்கள்? வித்தியாசமான செய்கைகளை செய்வார்கள். அதையெல்லாம் எப்படி சமாளிப்பது? அவர்களைப் பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி?

7 மாத குழந்தைகள்…

துணை இல்லாமல் தானாக உட்காரும் நிலையில் இருப்பர்.

10 அடிக்கு மேல் உள்ள பொருட்களையும் தெளிவாகக் காண முடியும்.

செய்கைகள் வித்தியாசமாக இருக்கும்.

ஆ, ஊ, ஏ என சத்தமாக கத்தவும் செய்வார்கள்.

அம்மா, அப்பா என்ற வார்த்தைகளைக் கவனிப்பார்கள். புரிய ஆரம்பிக்கும்.

சின்ன விஷயங்களையும் கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

இதையும் படிக்க: குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

Image Source : nostrofiglio

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

பொருட்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய தொடங்குவார்கள்.

ஒருவித தள்ளாட்டத்துடன் தவழ தொடங்குவார்கள்.

திடஉணவு கொடுத்தாலும் 500-600 மி.லி தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டியது அவசியம்.

தாய்ப்பாலுடன் திட உணவும் அவ்வப்போது கொடுக்க வேண்டும்.

இந்த மாதத்தில் நடு இரவில் குழந்தை விழித்துக்கொள்ளும். இதனால் பசியோ என தாய்ப்பால் தர வேண்டாம். குழந்தை எதற்காக விழிக்கிறது எனக் கவனியுங்கள்.

பசியா சும்மாவே எழுந்திருக்கிறதா எனப் பாருங்கள். இந்த மாதத்தில் நடு இரவில் குழந்தைகள் விழிக்கும் என்பது இயற்கையான விஷயம்.

பொருட்களை பிடித்துக் கொள்வார்கள். அதை வாயில் தரையில் என வைப்பார்கள். கவனமாக இருக்கவும்.

தாயும் இந்த மாதத்தில் நன்கு தூங்கி எழுந்து, தன் உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

8 மாத குழந்தைகள்

எட்டு மாத குழந்தைகள் தன் பாதங்களை தூக்கி வைத்து, லேசாக நடக்க முயற்சிப்பார்கள்.

சத்தம் அதிகமாக போடுவார்கள்.

வித்தியாசமான சத்தங்களை எழுப்புவார்கள்.

பொருட்களை கவனித்துப் பார்ப்பார்கள்.

தன் இரு கால்களுக்கு போதிய வலிமை கிடைத்துவிட்டால், உங்கள் குழந்தை நடக்க முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

சுவர், கதவு, டேபிள் என எதாவது பிடித்துக்கொண்டு நடப்பதை உங்களால் காண முடியும்.

Image Source : i stock

இதையும் படிக்க: 8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு எனத் தவழுவதோ நடப்பதோ போன்ற ஏதேனும் துறுதுறுவென்று செய்து கொண்டிருப்பார்கள்.

இந்த மாதத்தில் குழந்தையின் எடை, உயரம் சரியாக உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விரல்கள், கை, கால்கள் சரியாக, இயல்பாக அசைகிறதா, கேட்கும் திறன், உச்சரிப்பு திறன், பார்வை திறன், தூக்கம் ஆகியவை சரியாக இருக்கிறதா எனக் கவனியுங்கள்.

மாடி, படி, பால்கனி, வெளி இடங்கள் ஆகியற்றில் குழந்தை விளையாடினால் எப்போதும் நீங்கள் குழந்தையுடன் இருங்கள். தனியாக விட வேண்டாம்.

இந்த மாதத்தில் பெற்றோரும் தன்னுடன் விளையாட வேண்டும் எனக் குழந்தைகள் ஆசைப்படுவார்கள்.

பாட்டு பாடுவது, நடனமாடுவது என எதாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

ஒளிந்து விளையாடுதல் குழந்தைக்கு பிடித்தமான விஷயமாக இருக்கும்.

இதையும் படிக்க:  குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

Source : ஆயுஷ் குழந்தைகள்

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…