8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி | 8 Month Baby Food Chart & Recipe in Tamil

8 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

8 மாத குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது சவாலான விஷயம்தான். ஏனெனில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்திருக்கும். உணவு ஊட்ட பின்னாடியே செல்ல வேண்டியதாக இருக்கும். பற்களும் முளைத்திருப்பதால் உணவின் அளவும் அதிகமாகக் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இந்த 8-வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன (Food Chart for 8 Month Babies) கொடுக்கலாம் எனப் பார்க்கலாமா?

கீழ்க்காணும் உணவுகளை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம்.

  • காலிஃப்ளவர்
  • ப்ரோக்கோலி
  • முட்டை மஞ்சள் கரு
  • ரவை உப்புமா 
  • வெண்பொங்கல்  
  • ஹோம்மேட் செர்லாக் (சத்துமாவு)
  • பல வகையான பழங்கள்  

Image Source: Baby destination

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

  • குழந்தை அங்கும் இங்கும் தவழுவதால் தாய்ப்பால் கொடுப்பது சிரமமாக இருக்கும். எனினும் தாய்ப்பால் கொடுக்கத்தான் வேண்டும். அதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • தன் கைகளால் தொடுவது, விளையாடுவது, கைகளால் சேட்டைகள் செய்வது போன்றவற்றைக் கவனித்துச் சரியானவற்றைச் செய்ய அனுமதியுங்கள்.
  • குழந்தைகள் விதவிதமான உணவுகளைச் சாப்பிட முயல்வது, தொடுவது போன்றவை இருந்தால் உங்கள் குழந்தைக்கு ஃபிங்கர் ஃபுட் கொடுக்கலாம்.
  • குழந்தை உணவை பறித்து சாப்பிட முயன்றால் குழந்தைக்கு நிறைய உணவு தேவைப்படுகிறது. சத்தான உணவைக் கொடுக்க பாருங்கள்.
  • சில குழந்தைகள் உணவைக் கீழே தள்ளும், கொட்டும். அதற்கெல்லாம் தயாராக இருங்கள்.
  • இந்த நேரத்தில் இந்த உணவு என்ற எதுவும் இல்லை. குழந்தைக்கு எப்போதெல்லாம் பசிக்கிறதோ அப்போதெல்லாம் உணவைக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைக்கு எப்போது பசிக்கிறது எனக் கவனித்துப் பாருங்கள்.

பொதுவான அட்டவணையை இங்கே பாருங்கள்.

  • காலை உணவு – 9 மணி
  • காலை சிற்றுண்டி – 11 மணி
  • மதிய உணவு – 1.30 மணி
  • மாலை நேர சிற்றுண்டி– 5 மணி
  • இரவு உணவு – 8 மணி
  • இதற்கு நடுவில் உங்கள் குழந்தைக்குப் பசி இருந்தால், தாய்ப்பால் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். முடிந்த அளவுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தாய்ப்பால் கொடுங்கள். குறிப்பாக இரவு தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
  • எப்போதும் 3 நாள் விதியை பின்பற்றுங்கள். புதிய உணவுக் கொடுத்தால், அந்த உணவை 3 நாள் வரை உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா எனக் கவனித்த பிறகு மீண்டும் அந்த உணவைக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை

ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி?

Image Source: Flavouroma

தேவையானவை

  • ஓட்ஸ் – ½ கப்
  • தக்காளி ப்யூரி – ½ கப்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – ½ கப்

செய்முறை

  • ஓட்ஸை ஒன்றும் பாதியுமாகக் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மசித்துக் கொள்ளுங்கள்.
  • பிரஷர் குக்கரில் மேற்சொன்ன அனைத்தையும் போட்டு இரண்டு விசில் வரை வேக விடுங்கள்.
  • இரண்டு விசில் வந்ததும் நிறுத்தி, இளஞ்சூடாகக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயாரிப்பது எப்படி?

வாழைப்பழ பான்கேக்

Image Source: toddler tummies

தேவையானவை

  • வாழைப்பழம் – 1
  • முட்டை மஞ்சள் கரு – 1
  • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பவுலை எடுத்து அதில் வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ளுங்கள்.
  • இன்னொரு பவுலில் முட்டை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • வாழைப்பழத்தையும் முட்டையும் ஒன்றாகச் சேர்க்கவும்.
  • சூடான தவாவில் நெய் ஊற்றவும்.
  • இதில் நீங்கள் கலந்து வைத்த கலவையை பான்கேக் அளவில் ஊற்றவும்.
  • பொன்னிறமாக வந்த உடனே அடுப்பை நிறுத்திவிடவும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

பீட்ரூட் அல்வா

Image Source: yummy tummy

தேவையானவை

  • பீட்ரூட் – 1  
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
  • பொடித்த ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை
  • ஹோம்மேட் டேட்ஸ் சிரப் – 1 டீ ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்

செய்முறை

  • பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் அடித்து கூழாக்கிக் கொள்ளவும்.
  • பானில் நெய், நட்ஸ் பவுடர், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும்.
  • 2 நிமிடங்கள் அப்படியே வறுத்த பின், பீட்ரூட் கூழை சேர்க்கவும்.
  • பச்சை வாசனை நீங்கும் வரை பீட்ரூட்டை வதக்கவும்.
  • பீட்ரூட் வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, டேட்ஸ் சிரப் சேர்க்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி?

சம்பா கோதுமை கஞ்சி

Image Source: My little Moppet

தேவையானவை

  • சம்பா கோதுமை – 2 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 ½ கப்
  • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

  • பானில் நெய் ஊற்றி, சம்பா கோதுமை சேர்த்து வறுக்கவும்.
  • பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, வறுத்து, அதன் பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
  • கெட்டிப்பதத்திற்கு வரும் வரை நன்றாகக் கலந்து கொண்டே இருக்கவும்.
  • அடுப்பை அணைத்து விடவும்.
  • குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் இதனுடன் சேர்க்கலாம்.
  • இதனால் இன்னும் சத்துள்ளதாகக் கூழ் பதத்திற்கு மாறும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான சத்துமாவு – ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?

ராகி கூழ்

Image source: Yummy tummy

தேவையானவை

  • ராகி (கேழ்வரகு மாவு) – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 1 கப்
  • டேட்ஸ் ப்யூரி – 1 டீஸ்பூன்

செய்முறை

  • கேழ்வரகை நன்கு கழுவி, அலசி, ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.
  • தண்ணீரை வடித்து, உலர்த்தி வெள்ளை துணியில் வெயிலில் கேழ்வரகைக் காய வைக்கவும்.
  • ஒரு பானை எடுத்து, அதில் ராகியைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். மிதமான தீயில் வைக்கவும்.
  • சூடு ஆறியதும், வறுத்த கேழ்வரகை மெஷினில் கொடுத்து மாவாக்கிக் கொள்ளவும்.
  • சுத்தமான, காற்று புகாத டப்பாவில் இதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பானில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ராகி மாவைச் சேர்க்கவும்.
  • இந்த கூழ் நன்கு திக்காகும் வரை வேக விடவும். இதில் 1 டீஸ்பூன் டேட்ஸ் ப்யூரி கலந்து விடவும்.
  • ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்குக் கொடுத்தால் ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம்.
  • இளஞ்சூடாகக் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 7 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

பிளெயின் கிச்சடி

Image Source: Yummy tummy

தேவையானவை

  • அரிசி – ⅔ கப்
  • பாசிப் பருப்பு – ⅓ கப்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை

செய்முறை

  • அரிசியையும் பருப்பையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • நெய்யைத் தவிர அனைத்தையும் பிரஷர் குக்கரில் போட்டு வேக விடவும்.
  • 3 விசில் வந்ததும் நிறுத்தி விடுங்கள்.
  • பிரஷர் நீங்கியதும், நெய் சேர்த்துக் கலக்கவும்.
  • நன்கு மசித்து குழந்தைக்குக் கொடுக்கவும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் 15 உணவுகள்

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…